மசேநிதி பலன்களை மேலும் அதிகமானோர் உணர்ந்தனர்

மசேநிதி பலன்களை மேலும் அதிகமானோர் உணர்ந்தனர்

2 mins read
868c4c7d-1dd7-49fd-9906-a7096687b424
-

கொவிட்-19 கொள்­ளை­நோய் ஏற்­படுத்­தி­யுள்ள நிச்­ச­ய­மற்ற நிலை­யில் பல­ரும் மத்­திய சேம­நி­தித் திட்­டங்­கள் அளிக்­கும் பலன்­க­ளைப் பயன்­ப­டுத்­திக்­கொள்ள சென்ற ஆண்டு முன்­வந்­த­னர்.

குறிப்­பாக, தங்­க­ளின் மத்­திய சேம­நிதி ஓய்­வுக்­கால சேமிப்­புக் கணக்கு அல்­லது குடும்ப உறுப்­பி­ன­ரின் ஓய்­வுக்­கால சேமிப்­புக் கணக்­கில் தொகையை நிரப்­பிய உறுப்­பி­னர்­க­ளின் எண்­ணிக்கை 2019ஆம் ஆண்டை ஒப்­பி­டு­கை­யில் சென்ற ஆண்டு 40% அதி­க­மாக இருந்­தது.

ஓய்­வுக்­கால தொகை நிரப்­பும் திட்­டத்­தின் கீழ் சென்ற ஆண்டு கிட்­டத்­தட்ட 141,130 மத்­திய சேம­நிதி உறுப்­பி­னர்­கள் வழங்­கி­யி­ருந்த மொத்த தொகை மதிப்பு $2.97 பில்­லி­ய­னா­கும்.

2019ஆம் ஆண்­டில் 103,800 உறுப்­பி­னர்­கள் மட்­டுமே இத்­திட்­டம் மூலம் தங்­க­ளின் நிதி­களை அதி­கப்­ப­டுத்­தி­னர்.

வீட­மைப்பு தொடர்­பில் தொகை­யைத் திருப்­பித் தரும் உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கை­யும் 2019ஐ ஒப்­பி­டு­கை­யில் சென்ற ஆண்டு மும்­ம­டங்­கா­னது.

கிட்­டத்­தட்ட 14,980 உறுப்­பி­னர்­கள் இத்­திட்­டத்­தைச் சென்ற ஆண்டு பயன்­ப­டுத்­திக்­கொண்­ட­னர். அவர்­கள் மூலம் பெறப்­பட்ட தொகை $1.48 பில்­லி­யன். அதற்கு முந்­தைய ஆண்­டில் 5,500 உறுப்­பினர்­கள் மட்­டுமே இத்­திட்­டத்­தைப் பயன்­ப­டுத்­திக்­கொண்­ட­னர்.

திட்­டத்­தைப் பயன்­ப­டுத்­திச் சேமிப்பை அதி­கப்­ப­டுத்­து­வ­தன் பலனை மேலும் அதி­க­மா­ன­வர்­கள் உண­ரத் தொடங்­கி­யுள்­ள­தால் சென்ற ஆண்டு பலர் தங்­க­ளின் பணத்தை மத்­திய சேம­நி­திக் கணக்­கில் செலுத்­தி­னர் என்று கூறப்­படு­கிறது.

உறுப்­பி­னர்­கள் ஓய்­வுக்­கால பணம் நிரப்­பும் திட்­டத்­தின் கீழ் ரொக்­க­மா­கவோ தற்­போ­தைய மத்­திய சேம­நிதி சேமிப்­பு­க­ளையோ பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­லாம்.

தங்­க­ளின் சொந்த மத்­திய சேம­நி­திக் கணக்­கு­களில் தொகை நிரப்­பு­வோ­ருக்கு $7,000 வரை வரிக் கழி­வு­கள் கிடைக்­கும். தங்­க­ளின் பெற்­றோர், சகோ­த­ரர், கண­வர் போன்ற குடும்ப உறுப்­பி­னர்­க­ளின் கணக்­கு­களில் தொகை நிரப்­பி­னால் மேலும் $7,000 வரிக் கழி­வுக்­குத் தகு­தி­பெ­று­வர்.