தெற்காசிய ஊழியர்களுக்கு தடைவிதிப்பு; சிங்கப்பூர் கட்டுமானத் துறை பரிதவிப்பு

தெற்காசிய ஊழியர்களுக்கு தடைவிதிப்பு; சிங்கப்பூர் கட்டுமானத் துறை பரிதவிப்பு

2 mins read
ea9205f8-dc5c-4f96-a89e-3724e025969c
-

கட்­டு­மா­னத் துறையை விடா­மல் துரத்­து­கிறது, கொவிட்-19 கொள்ளை­நோய். தெற்­கா­சிய ஊழி­யர் தொடர்பான தடை­வி­திப்பால் கட்டு­மா­னத் துறை சந்­தித்து வந்த மனி­த­வளப் பிரச்­சி­னை மேலும் மோச­மாகியுள்ளது.

இத­னால், இரு மடங்கு சம்­ப­ளம் தரு­வ­தா­கக் கூறி ஒரு சில கட்­டு­மான நிறு­வ­னங்­கள், தங்­க­ளின் மனி­த­வ­ளப் பிரச்­சி­னை­யைச் சமா­ளித்து வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

வேலை­யிட விபத்­து­களும் அதி­க­ரித்­துள்­ளன. இவ்­வாண்டு ஜன­வரி மாதத்­திற்­கும் மார்ச் மாதத்­திற்­கும் இடைப்­பட்ட காலத்­தில் 3,300 வேலை­யிட விபத்­து­கள் நேர்ந்­தன.

கடந்த ஆண்டு அதே கால­கட்­டத்­தில் 3,100 சம்­ப­வங்­கள் நடந்­தன.

கிருமி முறி­ய­டிப்­பு காலம் சென்ற ஆண்டு ஏப்­ரல் மாதம் நடை­மு­றைப்­படுத்­தப்­பட்­டதை அடுத்து ஒரு வாரத்­தில் சரா­ச­ரி­யாக 1,000 கட்டு­மான ஊழி­யர்­கள் நாட்­டை­விட்டுச் சென்­று­விட்­ட­னர்.

அதி­க­ரிக்­கும் தொற்றுச் சம்­ப­வங்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த, எல்­லைக் கட்­டுப்­பா­டு­கள் மேலும் கடு­மை­யாக்­கப்­பட்­டன. விட்­டுச் சென்ற ஊழி­யர்­க­ளின் இடத்தை நிரப்ப நிறு­வ­னங்­கள் திண்­டா­டின.

மனி­த­வள அமைச்சு வழங்­கி­இருந்த தக­வ­லின்­படி, கட்­டு­மானம், கடல்­துறை, செயல்­மு­றைத் தொழில்­து­றை­களில் டிசம்­பர் 2019ல் 370,100 வெளி­நாட்­ட­வர்­கள் வேலை பார்த்­த­னர். ஆனால் சென்ற ஆண்டு டிசம்­பர் மாதத்­தில் இந்த எண்­ணிக்கை 311,000ஆகக் குறைந்­தது.

கிருமி முறி­ய­டிப்­புக் கால­கட்­டம் சென்ற ஜூன் மாதம் முடி­வ­டைந்­த­போது முக்­கி­ய­மான உள்­கட்­ட­மைப்பு, கட்­ட­டத் திட்­டங்­க­ளுக்­காக வேலை­ பார்க்க சுமார் 30,000 கட்­டு­மான ஊழி­யர்­கள் அனு­ம­திக்­கப்­பட்­ட­னர். இருப்­பி­னும் கட்­டு­மா­னத் துறை­யில் 50,000க்கும் மேற்­பட்ட ஊழி­யர்­கள் தேவைப்­ப­டு­வ­தாக துறை­சார்ந்த பங்­கு­தா­ரர்­கள் மதிப்­பி­டு­கின்­ற­னர்.

பாது­காப்­பான, கட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட முறை­யில் வெளி­நாட்டு ஊழி­யர்­களை சிங்­கப்­பூ­ருக்­குள் அனு­மதிக்­கு­மாறு கட்­டு­மா­னத் துறை மற்­றும் கட்­ட­டச் சூழல் பிரி­வின் முக்­கிய பிர­தி­நி­தி­கள் சென்ற வாரம் அர­சாங்­கத்­தி­டம் கோரிக்கை விடுத்­தி­ருந்­த­னர்.

எல்­லை­கள் நீண்­ட­கா­லத்­திற்கு மூடப்­பட்­டால் மனி­த­வ­ளச் சவால்­கள் மேலும் கடு­மை­யா­கி­வி­டும் என்று அவர்­கள் கூறி­யி­ருந்­த­னர்.

கட்­டு­மா­னத் திட்­டங்­க­ளைக் குறிப்­பிட்ட காலத்­திற்­குள் முடித்­து­வி­ட­வேண்­டும் என்ற அழுத்­த­மும் குத்­த­கை­தா­ரர்­கள் மீது உள்­ளது. இத­னால் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­க­ளி­லும் ஊழி­யர்­களை வேலைக்கு அழைக்க வேண்­டி­யுள்­ளது என்று கூறப்­ப­டு­கிறது.

இத­னால் ஊழி­யர்­கள் மேலும் களைப்­ப­டை­ய­லாம். மேலும் அதி­க சுகா­தார, வேலை­யிட அபா­யங்­களுக்கு ஆளா­கும் நிலை­யும் ஏற்­படக்கூடும் என்று கூறப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே, மனி­த­வ­ளத் தட்­டுப்­பா­டைச் சமா­ளிக்­கும் வகை­யில் சீனா­வி­லி­ருந்து வரும் ஊழி­யர்­கள் தொடர்­பி­லான விதி­க­ளைச் சென்ற மாதம் கட்­டட, கட்­டு­மான ஆணை­யம் தளர்த்­தி­யது.

அதன்­படி, சிங்­கப்­பூ­ருக்கு வரு­வ­தற்கு முன்­பாக தங்­க­ளின் திறன்­சார்ந்த சான்­றி­தழை ஊழி­யர்­கள் தங்­க­ளது நாட்­டில் முடிக்­கத் தேவை­இல்லை.

இந்­நி­லை­யில், கட்­டு­மா­னம் சார்ந்த முக்­கி­ய­மான சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு, வீட­மைப்பு, உள்­கட்­ட­மைப்­புத் திட்­டங்­கள் சில முடி­வடையத் தாம­த­மா­கி­யுள்­ளன.

தற்­போது 89 தேவைக்­கேற்­பக் கட்­டித்­த­ரப்­படும் (பிடிஓ) வீட்­டுத் திட்­டங்­கள் உள்­ளன. ஒரு சில பிடிஓ திட்­டங்­கள் முடி­வ­தற்கு மேலும் ஓராண்டு அல்­லது அதற்கும் மேல் ஆக­லாம் என்று கூறப்­ப­டு­கிறது.

சாங்கி விமான நிலை­யத்தின் முனை­யம் ஐந்­துக்­கான கட்­டு­மான வேலை­களும் குறைந்தது ஈராண்டு காலமாக நிறுத்­தப்­பட்­டுள்ளன.