பாலருக்குத் தமிழ் கற்பித்தல்: பயிலரங்கு தந்த ஆலோசனை பயி–ல–ரங்–கில் கலந்–து–கொண்ட 80க்கும் மேற்பட்ட தமி–ழா–சி–ரி–யர்–கள் பெரு–மி–தம்

இர்­ஷாத் முஹம்­மது

மாறு­பட்ட கலா­சாரப் பின்­ன­ணி­கள், வேறு­பட்ட மொழி பேசும் பின்­பு­லம், மாறு­பட்ட செயல் கொண்­ட­வர்­கள் போன்ற கார­ணங்­க­ளால் சிங்­கப்­பூர் வகுப்­பு­கள் பன்­மு­கத்­தன்­மை­யு­டன் விளங்­கு­கின்­றன. எனவே, பாலர் பள்ளிகளில் அதற்­கேற்ற கற்­பித்தல் அணு­கு­மு­றை தேவை என பாலர் பள்ளி தமி­ழா­சி­ரி­யர்­க­ளுக்­கான பயி­ல­ரங்­கில் பகி­ரப்­பட்­டது.

தமிழ்­மொழி கற்­றல் வளர்ச்­சிக் குழு­வின் ஏற்­பாட்­டில் 'ஸூம்' மெய்­நி­கர் தளத்­தில் சனிக்­கி­ழமை நடை­பெற்ற நான்கு மணி நேர பயி­லரங்­கில் 80க்கும் மேற்­பட்ட பாலர் பள்ளி தமிழ் ஆசி­ரி­யர்­கள் பங்­கேற்­ற­னர்.

தமி­ழா­சி­ரி­யர்­கள் தங்­கள் கற்­பித்­தல் அனு­ப­வங்­க­ளைப் பகிர்ந்­த­தோடு எவ்­வாறு மாற்­றங்­களை மேற்­கொண்டு கற்­பித்­தலை மேம்­படுத்த முடி­யும் என்று அறிந்­து­கொண்­ட­னர்.

சிறப்­புப் பேச்­சா­ள­ரா­கக் கலந்து­கொண்ட இளம் பரு­வ­கா­லத்­திற்­கான தேசி­யக் கல்­விக்­க­ழ­கத்­தின் வழி­காட்டு சிறப்­பாய்­வா­ளர் முனை­வர் சுகுணா விஜ­ய­தே­வர், வேறு­படுத்­தப்­பட்ட கற்­பித்தல் குறித்த கல்­வித் தத்­து­வம், கையா­ள­வேண்­டிய கார­ணம் போன்­ற­வற்றைத் தமி­ழா­சி­ரி­யர்­க­ளு­டன் பகிர்ந்­தார்.

பையப்­ ப­யி­லும் பிள்­ளை­கள், சரா­சரி நிலை­யி­லுள்ள பிள்­ளை­கள், மீத்­தி­றன் பிள்­ளை­கள் என மூவகைப் பிரி­வு­க­ளாக பாலர்­க­ளின் பின்­பு­லத்­தின் அடிப்­ப­டை­யில் அவ­ர­ வ­ருக்கு ஏற்­ற­வாறு பாடத்­திட்­டத்தை அமைப்­பது குறித்து ஆழ­மான கருத்­துப் பரி­மாற்­றங்­கள் பயி­ல­ரங்­கில் இடம்­பெற்­றன.

அர்த்­த­முள்ள விளை­யாட்­டு­கள், கற்­றல் நிலை­யங்­கள், வெளிப்­புற நட­வ­டிக்­கை­கள், பாத்­தி­ர­மேற்று நடித்­தல் நட­வ­டிக்கை, எழுத்­து­களை அடை­யா­ளங்­கா­ணும் நட­வடிக்கை, பொரு­ளைக் காட்­டிப் பேசு­தல் என பல­த­ரப்­பட்ட கற்­பித்­தல் உத்­தி­களை எடுத்­துக்­காட்­டு­க­ளு­டன் பகிர்ந்­த­னர் பேச்­சா­ளர்­கள். ஒவ்­வொரு நட­வ­டிக்­கை­யை­யும் வெவ்வேறு தர நிலைகளில் உள்ள பிள்­ளை­க­ளுக்­கு ஏது­வாக எவ்­வாறு அமைக்­க­லாம் என்­பதை­யும் அவர்கள் சுட்­டி­னர்.

இடை­யி­டையே, பங்­கேற்­பா­ளர்­கள் 'ஸூம்' மெய்­நி­கர் தளத்­தின் தனி அறை­களில் குழுக்­க­ளா­க கலந்­து­ரை­யாடி கொடுக்­கப்­பட்ட பாடத்­திட்ட நட­வடிக்கை உரு வாக்கத்தில் ஈடு­பட்­ட­னர்.

பாட இறு­தி­யில் இடம்­பெ­றும் மதிப்­பீட்டு நட­வ­டிக்­கை­யைப் பிள்ளை­க­ளின் கற்­றல் திற­னுக்­கும் விருப்­பத்­திற்­கும் கற்­றல் பாணிக்­கும் ஏற்­ற­வாறு வேறு­ப­டுத்­து­வது குறித்­தும் பகி­ரப்­பட்­டது.

"பிள்­ளை­க­ளின் வெளிப்­பாடு மூலம் அவர்­களை மதிப்­பி­டு­கிறோம். இந்த மதிப்­பீடு அவர்­களை அடுத்த நிலைக்கு இட்­டுச்­செல்ல பெரும் உத­வி­யாக இருக்­கும். மேலும் கற்­பித்­தலை மதிப்­பி­ட­வும் பிள்­ளை­களின் வெளிப்­பாடு வகை செய்­யும்," என்று விளக்­கி­னார் திரு­வாட்டி கௌரி சத்­தி­ய­மூர்த்தி.

பாலர் பள்ளி தமி­ழா­சி­ரி­யர்­கள் பணி மேம்­பா­டும் நிபு­ணத்­துவ மேம்­பா­டும் பெறு­வ­தற்கு உத­வும் வகை­யி­லும் மாறுபட்ட கற்­பித்­தல் முறை­யில் ஆசி­ரி­யர்­கள் நிபு­ணத்­து­வம் பெற­வும் நெறிப்­ப­டுத்­தக்­கூடியப் பயிற்­சி­யா­க­வும் முறை­யான வழி­காட்­டு­த­லா­க­வும் இந்­தப் பயி­ல­ரங்கு விளங்­கி­ய­தா­கக் கூறி­னார் கல்வி அமைச்­சின் பாடக்­க­லைத்­திட்ட வரைவு, மேம்­பாட்­டுப் பிரிவு 1, தாய்­மொழி­கள் துறை­யின் தமிழ்­மொ­ழிப் பகு­தி­யின் மூத்த சிறப்­பாய்­வா­ளர் திரு­வாட்டி உ‌‌‌ஷா­ராணி சுப்­ர­ம­ணி­யம்.

வேறு­ப­டுத்­தப்­பட்ட கற்­பித்­த­லில் இன்­னும் ஏராள அம்­சங்­கள் உள்­ளன என்­றும் ஓரளவுதான் இந்­தப் பயி­ல­ரங்­கில் பகிர முடிந்­தது என்­றும் தக­வல்­க­ளைத் திரட்டி மேலும் இது­போன்ற பயி­ல­ரங்­கில் பகி­ரக்­கூ­டிய வாய்ப்­பு­கள் உள்­ள­தை­யும் அவர் குறிப்­பிட்­டார்.

பயி­ல­ரங்­கில் கலந்­து­கொண்ட பாலர் பள்ளித் தமி­ழா­சி­ரி­யர்­கள் பல அம்­சங்­க­ளைக் கற்­று­கொண்­ட­தில் பெரு­மி­தம் அடைந்­த­னர்.

"பயி­ல­ரங்கு மிக­வும் பய­னுள்­ள­தாக இருந்­தது. பிள்­ளை­க­ளின் கற்­றல் தேவைக்­கேற்ப திட்­ட­மி­ட­வேண்­டும் என்­பது வலி­யு­றுத்­தப்­பட்­டது. குறிப்­பு­கள் நிறைய எடுத்­துக்­கொண்­டேன். இன்­னும் எவ்­வாறு சிறப்­பா­கக் கற்­பிக்­க­லாம் என்­பதைச் சிந்­திக்­கப்­போ­கி­றேன்," என்­றார் ராம­கி­ரு‌ஷ்ணா மி‌‌ஷன் சாரதா பாலர்­பள்­ளி­யின் தமி­ழா­சி­ரியை ரமா எனும் திரு­வாட்டி ராம­தி­ல­கம் சுப்­ர­ம­ணி­யம்.

"படைப்­பா­ளர்­கள் சிறந்த முறை யில் செய்­த­னர். எனது தலைமை ஆசி­ரி­ய­ரின் ஊக்­க­மும் ஒத்­து­ழைப்­பும் இது­போன்ற பயி­ல­ரங்­கில் கற்­றுக்­கொண்டு மாற்­றங்­களை ஏற்­படுத்த வகை­செய்­கின்­றன,"என்­றார் அவர்.

"மாறு­பட்ட திறன்­க­ளை­, வேறு­பட்ட பின்­பு­லன்­க­ளைக் கொண்ட பிள்­ளை­கள் இருப்­ப­தால் தேவை­களை அறிந்து பாடத்­திட்­டத்தை வரை­யும் உத்­தி­மு­றை­களை­யும் அவ­சி­யத்­தை­யும் புரிந்­து­கொண்­டேன். கலந்­து­ரை­யா­ட­லில் ஈடு­பட்டு சிந்­த­னை­க­ளைப் பகிர்ந்­தது மிக­வும் சிறப்பாக இருந்­தது," என்­றார் மூன்­றாண்­டு­க­ளாக கல்வி அமைச்சு பாலர் பள்ளி @ தெம்­ப­னி­சில் தமி­ழா­சி­ரி­யை­யா­கப் பணி­யாற்­றும் சிந்­தியா மரி­யாள்.

அதற்கு முன்­னர் 14 ஆண்­டு­களாக பாலர் பள்­ளி­யில் ஆங்­கில ஆசி­ரி­ய­ரா­கப் பணி­யாற்­றிய தனக்குப் பயி­ல­ரங்கு மிக­வும் பய­ன­ளிக்­கக்­கூ­டி­ய­தாக இருந்­தது என்­றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!