தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மின்ஸ்கூட்டர்கள் 91.5% குறைவு

1 mins read
8c938cf5-b8b0-493d-ae15-76228b7d07a1
-

சிங்­கப்­பூ­ரில் மின்ஸ்­கூட்­டர்­கள் 91.5% குறைந்­து­விட்­டன. மின்ஸ்­கூட்­டர் உள்­ளிட்ட தனி­ந­பர் நட­மாட்ட வாக­னங்­களை நடை­பா­தை­களில் பயன்­ப­டுத்­தக்­கூ­டாது என்று 2019 நவம்­ப­ரில் தடை விதிக்­கப்­பட்­டது. அதை அடுத்து அவற்­றின் எண்­ணிக்கை குறைந்­து­விட்­டது.

சிங்­கப்­பூ­ரில் பதி­வு செய்யப்­பட்ட மின்ஸ்­கூட்­டர்­க­ளின் எண்­ணிக்கை மார்ச் மாத முடிவு வாக்­கில் ஏறத்­தாழ 8,500 ஆக இருந்­தது என்று நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் கூறி­ய­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­தது. இங்கு 2019 நவம்­ப­ரில் ஏறத்­தாழ 100,000 மின்ஸ்­கூட்­டர்­கள் இருந்­தன. அவை இப்­போது 91.5% குறைந்­து­விட்­டன.

இதன் தொடர்­பில் கருத்துத் தெரி­வித்த போக்­கு­வ­ரத்­துக்­கான அர­சாங்க நாடா­ளு­மன்­றக் குழு­வின் துணைத் தலை­வ­ரான ராடின் மாஸ் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மெல்­வின் யோங், பொறுப்­பு­டன் கூடிய முறை­யில் பயன்­ப­டுத்­தப்­படும் பட்­சத்­தில் தனி­ந­பர் நட­மாட்ட சாதனங்­க­ளுக்கு சிங்­கப்­பூ­ரில் ஒளி­மயமான எதிர்­கா­லம் உண்டு என்றார்.