சாங்கி விமான நிலையம் முனையம் 3 கிருமித்தொற்று குழுமமாக மாறியதற்கு ஒரு குடும்பமே காரணம் என்று நம்பப்படுகிறது.
ஆனால் அந்தக் குடும்பத்தினர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் அல்லர் என்று சிங்கப்பூர் அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
தற்போது சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே செயல்படும் ஒரே பயணிகள் விமானம் 'வந்தே பாரத்' விமானங்களாகும்.
இந்த விமானங்கள் முனையம் ஒன்றில் மட்டுமே செயல்படுகின்றன என்ற சிங்கப்பூர் போக்குவரத்து, வெளியுறவு, மனிதவள அமைச்சு வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவித்தது.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து சிங்கப்பூரிலிருந்து விமானங்களுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது.

