இரண்டு பேர் மரணம்

இரண்டு பேர் மரணம்

1 mins read
d9ce247a-7dc7-4272-8ac7-51d6827fc63d
-

கப்­பல் தொட்டி ஒன்றைப் பரி­சோ­தித்தபோது அதன் உள்ளே மயங்கி விழுந்­து­விட்ட மேற் பார்வை­யா­ளர் ஒரு­வ­ரைக் காப்­பாற்­றும் முயற்­சி­யில் இரு­வர் மாண்­டு­விட்­ட­னர்.

இந்­தச் சம்­ப­வம் இம்­மா­தம் 19ஆம் தேதி நிகழ்ந்­தது என்று வேலை­யி­டப் பாது­காப்பு, சுகா­தார மன்­றம் நேற்று செய்தி அறிக்­கை­யில் தெரி­வித்­தது. சம்­ப­வம் நிகழ்ந்த நிறு­வ­னத்­தின் பெயர் முதலான விவரங்களை அந்த மன்றம் தெரி­விக்­க­வில்லை.

துரப்­பணக் கப்­பல் ஒன்­றின் தொட்­டி­யில் முறை­யான பாது­காப்­புச் சாத­னங்­கள் இல்­லா­மல் மேற்­பார்­வை­யா­ளர் உள்ளே இறங்­கி­ய­தா­க­வும் கொஞ்ச நேரத்­தில் அவர் மயங்கி விழுந்­து­விட்­ட­தா­க­வும் அவ­ரைக் காப்­பாற்ற முயன்ற இரண்டு ஊழி­யர்­கள் தொட்­டிக்­குள் விழுந்­து­விட்­ட­தா­க­வும் அந்த இரண்டு ஊழி­ய­ரில் ஒரு­வர் உயிர் பிழைத்­து­விட்­ட­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

மற்ற இருவரையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மீட்டது. ஆனால் அவர்கள் மாண்டுவிட்ட தாக மன்றம் குறிப்பிட்டது.