சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களில் அதிக மாணவர்கள் சேர்க்கப்படுவர்

இவ்­வாண்டு சிங்­கப்­பூ­ரின் தன்­னாட்சிப் பல்­க­லைக்­க­ழ­கங்­களில் அதிக மாண­வர்­கள் சேர்க்­கப்­ப­ட­வி­ருக்­கின்­ற­னர்.

கொவிட்-19 தொற்று கார­ண­மாக வெளி­நாட்­டில் பயி­லும் வாய்ப்பு பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தால் கூடு­தல் மாண­வர்­களை சேர்க்க பல்­க­லைக் கழங்­கள் அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­றன என்று கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் தெரி­வித்­தார்.

நேற்று வெளி­யிட்ட ஃபேஸ்புக் பதி­வில் அதிக மாண­வர்­களைச் சேர்ப்­ப­தற்­காக உள்­ளூர் பல்­க­லைக்­க­ழ­கங்­கள் நீக்­குப்­போக்­கு­டன் நடந்துகொள்­ளும் என்று திரு சான் குறிப்­பிட்­டார்.

இருந்­தா­லும் மாண­வர் சேர்க்­கைக்­கான தரத்தை தன்­னாட்சிப் பல்­க­லைக்­க­ழ­கங்­கள் தொடர்ந்து கட்­டிக்­காக்கும் என்­றும் உயர்­த­ரக் கல்வி உறுதி செய்­யப்­படும் என்றும் அமைச்­சர் வலி­யு­றுத்­தி­னார்.

கடந்த ஆண்டு ஆறு தன்னாட்சிப் பல்­க­லைக் கழ­கங்­களில் பல்­வேறு படிப்­பு­களில் கூடு­த­லாக 2,000 மாண­வர்­கள் சேர்க்­கப்­பட்­ட­னர் என்று கல்வி அமைச்சு தெரி­வித்­தது.

இவ்­வாண்டு ஜன­வ­ரி­யில் தன்­னாட்சிப் பல்­க­லைக்­க­ழ­கங்­களில் கூடு­த­லாக ஆயி­ரம் மாண­வர்­கள் சேர்க்க அனு­மதி வழங்­கப்­படும் என்று முன்­னாள் கல்வி அமைச்­சர் லாரன்ஸ் வோங் கூறி­யி­ருந்­தார்.

இவற்­றில் சில இடங்­கள் வெளி­நாட்­டில் கல்வி பயில திட்­ட­மிட்­டி­ருந்த மாண­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டன. பல­வீ­ன­மான வேலைச் சந்­தை­யில் நுழை­வ­தற்­குப் பதி­லாக தொடர்ந்து படிக்க விரும்­பிய சில மாண­வர்­களும் இந்த வாய்ப்­பைப் பயன்­ப­டுத்­திக்கொண்­ட­னர்.

இவ்­வே­ளை­யில் கொவிட்-19 தொற்­றுச் சூழலை கல்வி அமைச்சு தொடர்ந்து கண்­கா­ணிக்­கும் என்ற திரு சான், மாண­வர்­க­ளுக்கு ஆத­ரவு வழங்க தன்­னாட்சிப் பல்­க­லைக்­ க­ழ­கங்­க­ளு­டன் அணுக்­க­மா­கச் செயல்­படும் என்­றார்.

கொள்­ளை­நோய் பர­வல், மேற்கு நாடு­களில் ஆசி­யர்­க­ளுக்கு எதி­ரான வெறுப்­பு­ணர்வு போன்­றவை கார­ண­மாக புகழ்ெ­பற்ற பாரம்­ப­ரி­ய­மான உயர்­கல்வி நிலை­யங்­க­ளுக்கு விண்­ணப்­பிக்­கும் மாண­வர்­க­ளின் எண்­ணிக்கை குறைந்­துள்­ளது.

குறிப்­பாக பிரிட்­டிஷ் பல்­க­லைக்­ க­ழங்­களில் சேரும் சிங்­கப்­பூர் மாண­வர்­க­ளின் எண்­ணிக்கை சரிந்­துள்­ளது.

கடந்த 2019ல் பிரிட்­டிஷ் விசா­வுக்கு 2,535 சிங்­கப்­பூர் மாண­வர்­கள் விண்­ணப்­பித்­தி­ருந்­த­னர். ஆனால் கடந்த ஆண்டு 1,421 பேர் மட்­டுமே விண்­ணப்­பித்­த­னர் என்று பிரிட்­டிஷ் அர­சாங்க இணையத்­த­ளத்­தின் புள்­ளி­வி­வ­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்­கான விண்­ணப்­பங்­களும் 2019ல் 1,315லிருந்து கடந்த ஆண்டு ஐம்­பது விழுக்­காடு அதா­வது 530க்குக் குறைந்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!