கொவிட்-19 இரண்டாவது முடக்கத்தைத் தவிர்க்க கிருமிப்பரவல் தடுப்பு அரண் உத்தி தீவிரம்

கொவிட்-19 இரண்டாவது முடக்கத்தைத் தவிர்க்க கிருமிப்பரவல் தடுப்பு அரண் உத்தி தீவிரம்

2 mins read
29bba37f-ad9c-4481-bb73-39e7c54f02e5
-

கொவிட்-19 கிருமி பர­வு­வ­தைக் கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கத்­தில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் கிருமி பரவல் தடுப்பு அர­ண­மைப்பு உத்தி அண்­மை­யில் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்டுள்ளது.

இந்த உத்தி மூலம் இதர பகுதி­களுக்­குக் கிருமி பர­வு­வது தடுக்­கப்­படும் என்­ப­தால் இந்த ஏற்­பாடு தொற்று எண்­ணிக்­கையைக் குறைக்க உத­வு­வதாக சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் சாவ் சுவீ ஹோக் பொது சுகா­தா­ரப் பள்ளியின் தலை­வர் பேரா­சி­ரி­யர் டியோ யிக் யிங் தெரி­வித்­தார்.

இந்த உத்தி, தொற்று உள்ள ஒரு பகு­தியை முடக்கி வைக்­கும் அடிப்­ப­டை­யி­லா­னது. அந்த இடத்­தில் இருக்­கக்­கூ­டிய மக்­கள் பொது­மக்­க­ளு­டன் மேலும் கலந்­து­ற­வாடு­வது குறைக்­கப்­ப­டு­கிறது.

அந்­தப் பகு­தி­யில் எந்த அள­வுக்­குத் தொற்று இருக்­கிறது என்­பதை அதி­கா­ரி­கள் புரிந்­து­கொள்­ள­வும் இதன் மூலம் வழி ஏற்­ப­டு­கிறது என்று அவர் விளக்­கி­னார்.

இருந்­தா­லும் இந்த உத்­தியை கொவிட்-19 தொற்று தெரி­ய­வ­ரும் அடிப்­ப­டை­யில் முறை­யாக நிறை­வேற்ற வேண்­டும் என்­றும் அவர் தெரி­வித்­தார். இதே போன்ற அர­ண­மைப்பு உத்தி 2003ஆம் ஆண்டு சார்ஸ் தொற்று ஏற்­பட்­ட­போ­தும் பயன்­ப­டுத்­தப்­பட்­டது.

சார்ஸ் கிருமி தொற்­றிய நோயாளி­க­ளு­டன் அணுக்­கத் தொடர்­பில் இருந்­த­வர்­கள் வீட்­டி­லேயே தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

அண்­மை­யில் டான் டோக் செங் மருத்­து­வ­ம­னை­யில் இந்த உத்தி நடப்­புக்கு வந்து ஓர­ள­வு வெற்றி பெற்­றது. தடுப்பு அர­ணுக்கு உட்­படுத்­தப்­பட்ட பகு­தி­களில் தட­ம­றி­வது, கட்­டாய பரி­சோ­தனை, முழு­மூச்­சான துப்­பு­ரவு உள்­ளிட்ட பல­வும் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

தீவி­ர­மான கண்­கா­ணிப்­பும் மேற்­கொள்­ளப்­ப­டு­கிறது என்று நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் லீ கோங் சியான் மருத்­து­வப் பள்ளியின் மக்­கள்­தொகை சுகா­தார அறி­வி­யல் நிலை­யத்­தின் இயக்­கு­நர் பேரா­சி­ரி­யர் ஜோசிப் கார் கூறி­னார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

சிங்­கப்­பூ­ரின் கிருமிப் பரவல் தடுப்பு அரண் உத்தி சென்ற ஆண்டு முதல் மேம்­பட்டு வந்து இருக்­கிறது. இப்­போது இத்­த­கைய அர­ணுக்கு உட்­ப­டுத்­தப்­படும் பகுதி­கள் பெரி­ய­வை­யாக இருக்­கின்­றன.

இத­னி­டையே, தேசிய பல்­கலைக்­க­ழ­கத்­தைச் சேர்ந்த சாவ் சுவீ ஹோக் பொது சுகா­தா­ரத் துறை­யைச் சேர்ந்த தொற்­று­நோய் வல்­லு­நர் இணைப் பேரா­சி­ரி­யர் ஷூ லி யாங், பொரு­ளி­ய­லின் பெரும்­பா­லான பகு­தி­களில் தொடர்பு இல்­லாத தொற்­று­கள் தலை­காட்­டத் தொடங்­கும்போது பொது முடக்­கத்­திற்கு அது வழி­கோ­லக் கூடும் என்று கருத்­து­ரைத்­தார்.

ஒன்­றுக்­கொன்று தொடர்பில்­லாத தொற்­று­கள் அதி­க­ரிக்­கும் போது அது கட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட பகு­தி­களில் இருந்து எப்­ப­டியோ கிருமி வெளி­யா­கிறது என்­ப­தற்­கான அறி­கு­றி­யாக இருக்­கும்.

புதிய உரு­மா­றிய கிரு­மி­கள் அதிக வீரி­ய­மா­கச் செயல்­ப­டு­கின்­றன என்­ப­தும் இதற்­கான கார­ண­மாக இருக்­க­லாம். ஆனால் இதில் தடுப்பு அரண் உத்தி ஆற்­றல் குறை­வா­னது என்­று கூறு­வ­தற்கு இட­மில்லை என்­றும் இணைப் பேரா­சி­ரி­யர் விளக்­கி­னார்.