மின்சாரம், எரிபொருள், சில்லறை வர்த்தகம் போன்றவற்றின் விலையில் சிறு இறக்கத்துடன் கடந்த மாதத்திலும் சிங்கப்பூரில் மையப் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்தது.
தங்குமிடம், தனியார் சாலைப் போக்குவரத்து கட்டணம் போன்றவை தவிர மற்ற பிரிவுகளில் சிங்கப்பூரின் மையப் பணவீக்கம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மாதம் 0.6% அதிகரித்தது. நேற்று வெளியிடப்பட்ட தரவுகளிலிருந்து இந்தத் தகவல் பெறப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதத்தில் பணவீக்க அதிகரிப்பு 0.5 விழுக்காடாக இருந்தது.
கிட்டத்தட்ட ஓராண்டாக பூஜ்ஜியத்தைவிடக் குறைவாக இருந்த பணவீக்கம் கடந்த மூன்று மாதங்களாகத் தொடர்ந்து பூஜ்ஜியத்தைவிட அதிகமாக இருந்து வருகிறது.
கடந்த மார்ச் மாதத்தில் 1.3 விழுக்காடாக இருந்த ஒட்டுமொத்த பணவீக்கம் கடந்த மாதத்தில் 2.1 விழுக்காடாக அதிகரித்தது. இது 2 விழுக்காடாக இருக்கும் என்று புளூம்பெர்க் கருத்துக் கணிப்பில் நிபுணர்கள் கணித்திருந்தனர். தனியார் போக்குவரத்து, தங்குமிட பணவீக்கம், மையப் பணவீக்கம் ஆகியவற்றின் அதிகரிப்பை இந்த ஒட்டுமொத்தப் பணவீக்க அதி
கரிப்பு பிரதிபலிக்கிறது.
சிங்கப்பூரில் ஒட்டுமொத்தப் பணவீக்கம் இப்போதிருக்கும் விகிதத்திலேயே தொடர்ந்து இருக்கும் என்றும் ஆண்டின் இரண்டாம் பாதியில் அது குறையக்கூடும் என்றும் மையப் பணவீக்கம் தொடர்ந்து மெதுவாக அதிகரிக்கும் என்றும் சிங்கப்பூர் நாணய ஆணையம் மற்றும் வர்த்தக, தொழில்துறை அமைச்சு இணைந்து வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் தனியார் போக்குவரத்துச் செலவுகள் 12.9% அதிகரித்தன. கார் விலை, மற்ற தனியார் போக்குவரத்துச் செலவுகள் கிடுகிடுவென உயர்ந்ததே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது. மார்ச் மாதத்தில் அது 7.2 விழுக்காடாக இருந்தது.
மார்ச் மாதத்தில் 0.5 விழுக்
காடாக இருந்த தங்குமிட பணவீக்கம், வீட்டு வாடகை வேகமாக உயர்ந்ததால், ஏப்ரல் மாதத்தில் 0.7 விழுக்காடு வரை அதிகரித்தது.
சேவைப் பிரிவில் பணவீக்கம் 1.2 விழுக்காட்டிலிருந்து ஏப்ரல் மாதம் 1.1 விழுக்காடாகக் குறைந்தது. தொலைத்தொடர்பு சேவைக் கட்டணங்கள், குறைவான சுகாதாரக் காப்புறுதி பணவீக்கம் ஆகியவையே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
மார்ச் மாதத்தில் 1.4 விழுக்
காடாக இருந்த உணவு பணவீக்கம், சமைக்காத உணவுப் பொருள்
களின் பணவீக்கம் குறைந்ததால், ஏப்ரலில் 1 விழுக்காடாகக் குறைந்தது. ஏப்ரல் மாதத்தில் மின்சாரம், எரிவாயு விலைகள் 2.4% குறைந்தன. மார்ச் மாதத்தில் அது 9.7% குறைந்தது குறிப்பிடத்தக்கது.
சில்லறை விற்பனை, மற்ற பொருள்களின் விலையும் ஏப்ரல் மாதத்தில் 1.1% குறைந்தது. மார்ச் மாதத்தில் அது 1.5% குறைந்தது குறிப்பிடத்தக்கது.
தொலைத்தொடர்பு சாதனங்கள், தனிநபர் பயன்பாட்டுப் பொருள்களின் விலை அதிகரிப்பும் தனிநபர் பராமரிப்புப் பொருள்களின் விலை சற்றுக் குறைந்ததும் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும் நாட்டின் மையப் பணவீக்கம் தொடர்ந்து படிப்படியாக உயரும் என அறிக்கை குறிப்பிட்டது.
இவ்வாண்டு ஊதிய உயர்வு இருக்காது என்றும் வர்த்தக வளாகங்களின் வாடகை தொடர்ந்து நீட்டாற்றலுடன் இருக்கும் என்றும் எதிர்பார்ப்பதாக ஆணையத்தின் அறிக்கை குறிப்பிட்டது. இவ்வாண்டு மையப் பணவீக்கம் 0 முதல் 1% வரை இருக்கும் என்றும் ஒட்டுமொத்த பணவீக்கம் 0.5 முதல் 1.5% வரை இருக்கும் என்றும் அதிகாரபூர்வ கணிப்புகள் குறிப்பிடுகின்றன.

