பாலஸ்தீனத்துக்கு மனிதாபிமான உதவி செய்ய விரும்பும் சிங்கப் பூரர்களை உள்நாட்டு அமைப்பு களின் வழி நன்கொடை அளிக்கும்படி உள்நாட்டு துணை அமைச்சர் முகமது ஃபைஷல்
இப்ராஹிம் கேட்டுக்கொண்டுள்ளார். ரஹமத்தன் லில் அல்அமின் அறநிறுவனம், சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவை பாலஸ்தீனத்துக்கான உலக நிறுவன மனிதாபி மானப் பணி அமைப்புடன் சேர்ந்து பணியாற்றுகின்றன. சுமார் 1.8 மில்லியன் வெள்ளி நிதியை அவை திரட்டியுள்ளன. நம்பகத் தன்மை இல்லாத வெளிநாட்டு அமைப்பு களுக்கு நன்கொடை தருவதன் அபாயத்தை நினைவில் வைத்துக்கொள்ளும்படி அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
தமது ஃபேஸ்புக் பக்கத்தில் அது பற்றி பதிவிட்டார் இணைப் பேராசிரியர் பைஷல்.

