தொடக்கப்பள்ளிகளில் 7 புதிய பாலர் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன

மேலும் ஏழு புதிய கல்வி அமைச்­சுப் பாலர் பள்­ளி­கள் 2024, 2025 ஆண்டு­களில் தொடக்­கப்­பள்ளி வளா­கங்­களில் திறக்­கப்­படும்.

பாலர் ஆண்டு ஒன்­றில் ஒவ்­வொரு பள்­ளி­யும் சுமார் 100 முதல் 120 இடங்­களை ஒதுக்­கும் என்று கல்வி அமைச்சு நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது.

பாலர் பள்­ளி­கள் திறக்­கப்­படும் ஆண்­டுக்கு முந்­தைய ஆண்டு பிப்­ர­வரி மாதம் அவற்­றில் சேர்­வ­தற்­கான முன்­ப­திவு தொடங்­கும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

"நமது கல்வி அமைச்சு பாலர் பள்­ளி­க­ளின் எண்­ணிக்­கை­யைத் தொடர்ந்து அதி­க­ரிப்­ப­தன் மூலம் மேலும் அதி­க­மான சிங்­கப்­பூ­ரர்­களுக்­குக் குறைந்த கட்­ட­ணத்­தில் தர­மான பாலர் பள்­ளிப் படிப்பு கிடைப்­பதை உறு­தி­செய்ய முடி­யும்," என்று கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் நேற்று தமது ஃபேஸ்புக் பதி­வில் தெரி­வித்­தி­ருந்­தார்.

இப்­பு­திய ஏழு பாலர் பள்­ளி­களையும் சேர்த்து மொத்­தம் 57 கல்வி அமைச்சு பாலர் பள்­ளி­கள் செயல்­படும் என்று கூறப்­படு­கிறது.

இதன்­படி, 2025ஆம் ஆண்­டில் கிட்­டத்­தட்ட 7,900 முத­லாம் பாலர் ஆண்டு மாண­வர்­க­ளுக்கு இடம் கிடைக்­கும் என்று கல்வி அமைச்சு கூறி­யுள்­ளது.

தற்­போது 36 கல்வி அமைச்சு பாலர் பள்­ளி­கள் செயல்­பட்டு வரு­கின்­றன. அடுத்த ஆண்டு மேலும் எட்டு புதிய பள்­ளி­களும் 2023ல் ஏழு புதிய பள்­ளி­களும் அப்­பட்­டி­ய­லில் சேர்க்­கப்­படும்.

கல்வி அமைச்­சின் கீழ் செயல்­படும் அனைத்து பாலர் பள்­ளி­களும் தமிழ், மலாய், சீனம் ஆகிய மூன்று தாய்­மொ­ழிப் பாடத்திட்டங்களையும் கொண்டிருக்கும். இத­னால், பிள்­ளை­க­ளின் ஆரம்­ப­கால ஆண்­டு­களில் இரு மொழித் திறனை ஊக்­கு­விக்க முடி­வ­து­டன் பிந்­தைய ஆண்­டு­களுக்­கான மொழிக் கற்­ற­லுக்­கும் வலு­வான அடித்­த­ள­மிட முடி­யும் என்று தெரி­வித்­தது அமைச்சு.

தங்­க­ளின் பாலர்­கள் தொடக்­கப்­பள்ளி ஒன்­றில் சுமு­க­மாக அடி­யெ­டுத்து வைப்­ப­தற்கு ஆத­ர­வாக, பாலர் பள்ளி அமைந்­துள்ள அந்­தந்த தொடக்­கப்­பள்­ளி­யு­டன் அணுக்­க­மாக இணைந்து செயல்­படு­வ­தா­க­வும் கல்வி அமைச்சு குறிப்­பிட்­டது.

தங்­க­ளின் பிள்­ளைக்கு முழு­நேரப் பரா­ம­ரிப்­புச் சேவை தேவைப்­படும் நிலை­யில் உள்ள பெற்­றோருக்­காக அனைத்து கல்வி அமைச்சு பாலர் பள்­ளி­க­ளி­லும் சிறு­வர் பரா­மரிப்­புச் சேவையும் வழங்­கப்­படு­கிறது.

இச்­சே­வை­ திங்­கள் முதல் வெள்ளி வரை காலை ஏழு மணி தொடங்கி மாலை ஏழு மணிக்கு வழங்­கப்­படும் என்­றும் கூறப்­பட்­டது.

கெஷ­ரினா, தஞ்­சோங் காத்­தோங், யாங்­ஸெங், பொங்­கோல், சவுத் வியூ தொடக்­கப்­பள்­ளி­களில் 2024ஆம் ஆண்டில் புதிய பாலர் பள்­ளி­கள் திறக்­க­வுள்­ளன. 2025ஆம் ஆண்­டில் இலி­யாஸ் பார்க், ஹவ்­காங் தொடக்­கப்­பள்­ளி­களில் பாலர் பள்­ளி­கள் செயல்­ப­டத் தொடங்­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!