செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
6c9f2d32-533a-4d64-b0a8-830627df2720
-

ஜப்பானிய பிரதமருக்கு நன்றி தெரிவித்தார் பிரதமர் லீ

கொவிட்-19 நிலவரம் மோசமடைந்து வருவதைக் கருதி இவ்வாண்டு நடைபெறுவதாக இருந்த ஷங்ரிலா கலந்துரையாடல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், நிகழ்ச்சியின் முதன்மை உரை ஆற்றும் அழைப்பை ஏற்றிருந்த ஜப்பானிய பிரதமர் சுகா யோஷிஹிடேயுடன் தாம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசியதாகவும் அழைப்பை ஏற்றதற்கு நன்றி தெரிவித்ததாகவும் பிரதமர் லீ சியன் லூங் நேற்று தம் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். இரு நாடுகளின் உறவை மேலும் வலுவாக்கத் தாம் விரும்புவதாகவும் பிரதமர் சுகாவிடம் அவர் கூறியிருந்ததாக பதிவில் குறிப்பிட்டார் திரு லீ.

பயணக் கட்டணத்தை

$1 உயர்த்தும் கிராப் நிறுவனம்

எண்ணெய், பராமரிப்புச் செலவுகளுக்கு மத்தியில் தன் ஓட்டுநர்களின் வருமானத்தை மேம்படுத்தும் நோக்கில், கிராப் நிறுவனம் அடுத்த மாதம் முதல் வாகனப் பயணக் கட்டணத்தை $1 உயர்த்தவுள்ளது. ஜூன் 1 முதல் 30 வரை இந்த ஒரு வெள்ளியில் தரகுப் பணத்தை நிறுவனம் கோராது என்றும் கூறப்பட்டது. 2017 பிறகு இப்போது கிராப் அதன் அடிப்படைக் கட்டணத்தை உயர்த்துகிறது. இந்நிலையில் புதிய கட்டணங்களைப் பயணிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக, உச்சநேரப் பயணம் மேற்கொள்வோருக்கு ஜூன் 1 முதல் 14 வரை நிறுவனம் $1 மதிப்பிலான பற்றுச்சீட்டுகளை வழங்கவுள்ளது. ஒவ்வொரு கிராப் பயணியும் நாளுக்குத் தலா இரண்டு பற்றுச்சீட்டுகளுக்குத் தகுதிபெறுவர்.