எஸ்ஐஏ விமானங்கள் பெலாரஸ் ஆகாயவெளியை தவிர்க்க முடிவு

எஸ்ஐஏ விமானங்கள் பெலாரஸ் ஆகாயவெளியை தவிர்க்க முடிவு

1 mins read
4f038f4b-ea09-49db-921b-9be3fa3fff62
-

பெலாரஸ் ஆகாயவெளியைத் தவிர்த்துவிடும் நோக்கில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) அதன் ஐரோப்பிய விமானப் பயணங்கள் அனைத்தையும் வேறு வழியாக மாற்றிவிட்டது.

லித்துவேனியாவுக்குப் பயணம் செய்துகொண்டிருந்த விமானம் ஒன்றை, பெலாரஸ் அதிகாரிகள் வழிமறித்து வலுக்கட்டாயமாக அதை பெலாரஸ் தலைநகரான மின்ஸ்க்கில் தரையிறங்க வைத்ததை அடுத்து எஸ்ஐஏ இம்மாற்றத்தைச் செய்துள்ளது.

பெலாரஸ் அதிபரை வெகுவாக விமர்சித்து வரும் செய்தியாளரான திரு ரோமன் புரோட்டசெவிக், அந்த 'ரயன்ஏர்' விமானத்தில் இருந்ததாகவும் விமானம் தரையிறங்கியதும் அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.