குடும்பப் பிணைப்பில் இளையர்களின் முக்கிய பங்கு

குடும்பப் பிணைப்பில் இளையர்களின் முக்கிய பங்கு

1 mins read
e857167c-2a82-4964-b41f-9cd823b03b18
-

குடும்­பத்தை மைய­மா­கக் கொண்ட முதல் இளை­யர் மாநாடு நேற்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. இரண்டு மணி நேர நிகழ்­வில் 20 கல்வி நிலை­யங்­க­ளைச் சேர்ந்த கிட்­டத்­தட்ட 600 இளை­யர்­கள் கலந்­து­கொண்­ட­னர்.

குடும்­பக் கலந்­து­ரை­யா­டல்­களில் இளை­யர்­களை மைய­மாக வைப்­பது முக்­கி­யம் என்று தமது உரை­யில் குறிப்­பிட்­டார் கலா­சார, சமூக, இளை­யர்­துறை துணை அமைச்­சர் ஆல்­வின் டான்.

பின்­னா­ளில் இதே இளை­யர்­கள் வலு­வான குடும்ப உற­வு­களை ஏற்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்­குத் தேவை­யான வளங்­களை முன்னரே வழங்­க­வேண்­டும் என்று அவர் கூறி­னார்.

குடும்­பத்­தில் ஏற்­ப­டக்­கூ­டிய துன்­ப­நி­லையை எதிர்­கொள்­ள­வும் தலை­மு­றை­களுக்கு இடை­யி­லான உறவை வலுப்­ப­டுத்­த­வும் இளை­யர்­கள் முக்­கிய பங்கு வகிக்­க­லாம் என்று வலி­யு­றுத்­தி­னார் அமைச்­சர்.