'சன்னல்களைத் திறந்துவிடுங்கள்; குளிரூட்டி பயன்பாட்டைத் தவிர்த்துவிடுங்கள்'

'சன்னல்களைத் திறந்துவிடுங்கள்; குளிரூட்டி பயன்பாட்டைத் தவிர்த்துவிடுங்கள்'

1 mins read
769f6d9f-aafe-4922-ac09-adfb18deba0f
-

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைத் தடுக்­கும் பொருட்டு புதிய வழி­காட்­டு­தல்­கள் வெளி­யி­டப்­பட்­டன. சன்­னல்­க­ளை­யும் கத­வு­க­ளை­யும் திறந்து வைக்­கு­மாறு அலு­வ­லங்­க­ளுக்கு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது. அத்­து­டன், குளி­ரூட்­டி­யைக் குறைப்­பது அல்­லது பயன்­ப­டுத்­தா­மல் இருப்­பது நல்­லது என்­றும் கூறப்­பட்­டது.

சுகா­தார அமைச்சு, தேசிய சுற்­றுப்­புற அமைப்பு, கட்­டட கட்­டு­மான ஆணை­யம் ஆகிய மூன்­றும் இணைந்து வெளி­யிட்ட ஐந்து பக்க ஆவ­ணத்­தில் இந்த வழி­காட்­டு­தல்­கள் இடம்­பெற்­றி­ருந்­தன.

காற்­றோட்­டம் அதி­க­மில்­லாத இடங்­களில் கிரு­மிப் பட­லங்­கள் கொவிட்-19 தொற்­றைப் பரப்­ப­லாம்.

அலு­வ­ல­கக் கட்­ட­டங்­கள், கடைத்­தொ­கு­தி­கள், சில்­லறை வர்த்­த­கக் கடை­கள், பல் மருந்­த­கங்­கள், உண­வங்­கா­டி­கள், தங்கு­வி­டு­தி­கள் போன்ற பல்­வேறு இடங்­களில் கட்­டட உரி­மை­யா­ளர்­களும் வளாக நிர்­வா­கத்­தி­ன­ரும் பின்­பற்­றக்­கூ­டிய நட­வ­டிக்­கை­களை இந்த வழி­காட்­டு­தல்­கள் அறி­வு­றுத்­தி­யுள்­ளன.

இந்­நி­லை­யில் கத­வு­கள் மூடித் திறப்­ப­தால் பொதுப் பேருந்­து­களி­லும் ரயில்­க­ளி­லும் காற்­றோட்­டம் அதி­கம் உள்­ள­தாக சென்ற ஆண்டு மேற்­கொண்ட ஆய்­வில் 'ஏஸ்­டார்' நிறு­வ­னம் கண்­ட­றிந்­தது.

சுத்­தம் செய்­யும் பணி­களும் தீவி­ர­மாக நடந்­தால் கிரு­மிப் பர­வ­லைத் தடுக்­க­லாம் என்று கூறப்­பட்­டது.