இவ்வாண்டின் முதல் காலாண்டில் சிங்கப்பூரின் பொருளியல் எதிர்பார்க்கப்பட்டதைவிட வேகமாக வளர்ச்சி கண்டு 1.3 விழுக்காடாகப் பதிவானது. கடந்த காலாண்டில் பொருளியல் 2.4 விழுக்காடு சரிந்தது. அதுமட்டுமல்லாது, மொத்த உள்நாட்டு உற்பத்தி தற்பொழுது 0.2 விழுக்காடு உயர்ந்தது.
இந்தக் தகவல்களை வர்த்தக, தொழில் அமைச்சு நேற்று வெளியிட்டது.
கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்க அண்மையில் விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகள், எல்லைகள் மூடல் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளை இவ்வாண்டு முதல் காலாண்டின் எதிர்பாராத பொருளியல் வளர்ச்சி ஈடுசெய்யும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், சிங்கப்பூரின் பொருளியல் இவ்வாண்டு நான்
கிலிருந்து ஆறு விழுக்காடு வரை வளரும் என்று தொடர்ந்து
முன்னுரைக்கப்படுவதாக அமைச்சு தெரிவித்தது.
இதுதொடர்பாக கூடுதல் தரவுகள் கிடைத்த பிறகு முழு
ஆண்டுக்கான முன்னுரைப்பு, வரும் ஆகஸ்ட் மாதம் மறுஆய்வு செய்யப்படும் என்று அது கூறியது.
முதல் காலாண்டில் பதிவாகியுள்ள பொருளியல் வளர்ச்சி, முழு ஆண்டுக்கான முன்னுரைப்பை உயர்த்த அழைப்பு விடுத்திருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆயினும், அண்மையில் சிங்கப்பூரிலும் வெளிநாடுகளிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் எதிர்பார்ப்புகள் குறைந்திருப்பதாக அவர்கள் தெரிவித்
தனர். உள்ளூரிலும் வெளிநாடு
களிலும் கொவிட்-19 பாதிப்பு அதி
கரித்திருப்பதால் நிலையற்றதன்மை கூடியிருப்பதாக அமைச்சு கூறியது. கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து வெளிப்புறப் பொருளியல் நடவடிக்கைகள் மேம்பட்டு வருவதாக வர்த்தக, தொழில் அமைச்சின் நிரந்தரச் செயலாளர் திரு கேப்ரியல் லிம் தெரிவித்தார்.
"பொருளியல் மேம்பட்டு வரும் அதே சமயத்தில், கொவிட்-19 நெருக்கடிநிலையும் தொடர்கிறது. இதனால் பல பொருளியல்
நடவடிக்கைகள் தடைபட்டுள்ளன. இதன் விளைவாகப் பொருளியல் மீட்சி பாதிப்படையும் அபாயம் உள்ளது," என்று முதல் காலாண்டின் பொருளியல் ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்ட பிறகு நடந்த
செய்தியாளர் கூட்டத்தில் திரு லிம் கூறினார்.
அண்மையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் சிங்கப்பூர்
பொருளியலின் சில பிரிவுகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறிய திரு லிம், உலகளாவிய நிலையில் பொருளியல் மேம்பட்டு வருவதால் சிங்கப்பூரின் பொருளியலும் வளர்ச்சி காணும் என்று தெரிவித்தார்.
காலாண்டுக்குக் காலாண்டு அடிப்படையில் சிங்கப்பூரில் பொருளியல் 3.1 விழுக்காடு ஏற்றம் கண்டது.
ஆண்டுக்காண்டு அடிப்படையில் உற்பத்தித் துறை 10.7 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
மின்னணுவியல், துல்லியப் பொறியியல், ரசாயனத் துறை ஆகியவற்றில் பதிவான வளர்ச்சி காரணமாக முதல் காலாண்டில் பொருளியல் மேம்பட்டுள்ளது.
போக்குவரத்துப் பொறியியல், பொது உற்பத்தித் துறை, உயிர்
மருத்துவ உற்பத்தி ஆகிய துறைகளில் ஏற்பட்ட பின்னடைவை இவை ஈடுசெய்தன.
ஆண்டுக்காண்டு அடிப்படையில் மொத்த வியாபாரத் துறை இக்காலாண்டில் 3.5 விழுக்காடு ஏற்றம் கண்டது. இதற்கு முந்தைய காலாண்டில் பதிவான 1.8 விழுக்காடு வளர்ச்சியைவிட இது
அதிகம். முன்னுரைக்கப்பட்டுள்ள நான்கிலிருந்து ஆறு விழுக்காடு பொருளியல் வளர்ச்சியைவிட சிங்கப்பூரின் பொருளில் கூடுதல் வளர்ச்சி காணும் சாத்தியம் இருப்பதாக அமைச்சு கூறியது.
இருப்பினும், நிலைமை மோச
மடையும் அபாயமும் இருப்பதாக அது எச்சரிக்கை விடுத்தது. அது கொவிட்-19 சூழலைப் பொறுத்தது என்று அது கூறியது.
கொவிட்-19 நெருக்கடிநிலையால் தொடரும் நிலையற்றதன்மை காரணமாக உள்நாட்டு மொத்த உற்பத்திக்கான முன்னரைப்பு தொடர்ந்து நான்கிலிருந்து ஆறு விழுக்காடாக இருக்கும் என்று அமைச்சு கூறியது.

