சிங்கப்பூரின் முக்கிய வர்த்தக, ஏற்றுமதி முன்னுரைப்புகள் உயர்த்தப்பட்டுள்ளன

சிங்கப்பூரின் முக்கிய வர்த்தக, ஏற்றுமதி முன்னுரைப்புகள் உயர்த்தப்பட்டுள்ளன

2 mins read
05d4065f-b5ab-432e-8b12-3e9075f23610
-

இவ்­வாண்­டின் முதல் காலாண்­டில் சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­யல் எதிர்­பார்க்­கப்­பட்­ட­தைக் காட்­டி­லும் கூடு­தல் வளர்ச்சி கண்­டுள்­ள­தால் நாட்­டின் முக்­கிய வர்த்­தகம் ஏற்­று­மதி ஆகி­ய­வற்­றுக்­கான முன்­னு­ரைப்­பு­கள் உயர்த்­தப்­பட்­டுள்­ளன.

எண்­ணெய் சாரா உள்­நாட்டு ஏற்­று­ம­தி­கள் இவ்­வாண்டு ஒன்­றி­லி­ருந்து மூன்று விழுக்­காடு வளர்ச்சி அடை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இதற்கு முன்பு அது பூஜ்யம் விழுக்­கா­ட்டி­லி­ருந்து இரண்டு விழுக்­காடு வரை மட்­டுமே அதி­க­ரிக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது.

மொத்த வர்த்­த­கம் ஐந்­தி­லி­ருந்து ஏழு விழுக்­காடு வரை உய­ரும் என்று முன்­னு­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த பிப்­ர­வரி மாதத்­தில் முன்­னு­ரைக்­கப்­பட்­டி­ருந்த இரண்­டி­லி­ருந்து நான்கு விழுக்­காடு வரையிலான வள­ரச்­சி­யை­விட இது அதி­கம். இவ்­வாண்­டின் முதல் காலாண்­டில் எண்­ணெய் சாரா உள்­நாட்டு ஏற்­று­மதி ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் 9.7 விழுக்­காடு அதி­க­ரித்­த­தும் சிங்­கப்­பூர் பொரு­ளி­ய­லின் சில முக்­கிய பிரி­வு­க­ளுக்­கான முன்­னு­ரைப்­பு­களும் உயர்த்­தப்­பட்­டுள்­ளன.

மின்­ன­ணு­வி­யல், மின்­னு­ணு­

வி­யல் சாரா ஏற்­று­ம­தி­கள் அதி­

க­ரித்­தி­ருப்­ப­தால் இந்த நிலை ஏற்­பட்­டுள்­ளது. கடந்த காலாண்­டில் இந்த ஏற்­று­ம­தி­கள் ஐந்து விழுக்­காடு சரி­வைக் கண்­ட­தா­க­வும் தற்­போது நிலைமை மாறி­விட்­ட­தா­க­வும் என்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் அமைப்பு நேற்று தெரி­வித்­தது.

முக்­கிய மின்­ன­ணு­வி­யல்

ஏற்­று­ம­தி­கள் முதல் காலாண்­டில் 14.8 விழுக்­காடு அதி­க­ரித்­தது.

தொலை­த்தொ­டர்புச் சாத­னங்­

க­ளுக்­கான தேவை­ அதி­க­ரித்­

தி­ருப்­பதே இதற்­குக் கார­ணம் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மின்­னு­ணு­வி­யல் சாரா ஏற்­று­

ம­தி­களும் 8.3 விழுக்­காடு வளர்ச்சி கண்­டது. சிறப்பு இயந்­தி­ரங்­கள், முக்­கிய ரசா­ய­னங்­கள், பெட்ரோலிய ரசாயனம் ஆகி­ய­வற்­றின் ஏற்­று

­ம­தி­க­ளின் அதி­க­ரிப்பு இதற்கு

முக்­கிய கார­ணம்.

இதற்­கி­டையே, இவ்­வாண்­டின் முதல் காலாண்­டில் உள்­நாட்டு எண்­ணெய் சார்ந்த ஏற்­று­மதி ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் 19.3 விழுக்­காடு சரிந்­தது. ஆனால் கடந்த ஆண்டு இறு­திக் காலாண்­டில் பதி­வான 30.6 விழுக்­காடு வீழ்ச்­சி­யை­விட நிலைமை மேம்­பட்­டி­ருப்­பதை என்­டர்­பி­ரைஸ்

சிங்­கப்­பூர் அமைப்பு சுட்­டி­யது.