முகக்கவசம் அணிய மறுத்த மாது கைது; மேலும் பல குற்றச்சாட்டுகள்

முகக்கவசம் அணிய மறுத்த மாது கைது; மேலும் பல குற்றச்சாட்டுகள்

2 mins read
952cfaee-84ba-4509-bc12-2772ecd27452
-

இம்­மா­தம் 15ஆம் தேதி மரினா பே சேண்ட்­சில் முகக்­க­வ­சம் அணிய மறுத்த மாது மீது, கொவிட்-19 (தற்­கா­லிக நட­வ­டிக்­கை­கள்) சட்­டத்­தின்­கீழ் நேற்று மேலும் பல குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டன.

பூன் சியு யோக், 53, எனும் அந்­தப் பெண்­மணி, தொற்­று­நோய்த் தடுப்­புச் சட்­டத்­தின்­கீ­ழும் ஒரு குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார்.

சிங்கப்பூரரான பூன் நேற்று கைது செய்­யப்­பட்­ட­தாக போலி­சும் குடி­நு­ழைவு, சோத­னைச் சாவடி ஆணை­ய­மும் கூட்­ட­றிக்கை மூலம் தெரி­வித்­தன.

கடந்த ஆண்டு ஜூன் 28ஆம் தேதி பிரிட்­ட­னில் இருந்து பூன் சிங்­கப்­பூர் வந்­த­தா­க­வும் ஹோட்­ட­லில் 14 நாள் கட்­டா­யத் தனி­மை­யில் இருந்­த­போது முகக்­க­வ­ச­மின்றி பல­முறை அவர் தமது அறை­யை­விட்டு வெளியே சென்­ற­தா­க­வும் அந்த அறிக்கை கூறு­கிறது.

அத்­து­டன், கடந்த டிசம்­பர் 2ஆம் தேதி­யி­லி­ருந்து இம்­மா­தம் 24ஆம் தேதி­வரை குறைந்­தது நான்கு முறை பொது இடங்­களில் அவர் முகக்­க­வ­சம் அணி­யத் தவ­றி­ய­தா­க­வும் தெரிவிக்கப்பட்டது.

கிளார்க் கீ சென்ட்ரல், பிராஸ் பசா கடைத்தொகுதி ஆகிய இடங்கள் அவற்றில் அடங்கும்.

இம்­மா­தம் 15ஆம் தேதி போலிஸ் அவரை விசா­ரித்­த­தா­க­வும் அதற்கு ஒன்­பது நாட்­க­ளுக்­குப் பின் நீதி­மன்­றத்­தை­விட்டு வெளி­யே­றிய போது முகக்­க­வ­சம் அணி­யத் தவ­றிய குற்­றத்தை அவர் மீண்­டும் இழைத்­த­தா­க­வும் அக்­கூட்­ட­றிக்கை குறிப்­பிட்­டது.

தாம் ஒரு முன்னாள் கடற்படை அதிகாரி என்றும் வேண்டுமென்றே விதிமுறைகளை மீறவில்லை என்றும் நீதிபதியிடம் பூன் தெரிவித்தார்.

விதிமுறைக்கு உட்பட்டு நடநக்க முயன்றதாகவும் ஆனால் அது இயற்கைக்கு மாறானது என்று உணர்ந்ததாகவும் அவர் கூறினார்.

மன­ந­லக் கண்­கா­ணிப்­புக்­காக பூன் மன­ந­லக் கழ­கத்­தில் தடுப்­புக் காவ­லில் வைக்­கப்­ப­டு­வார். அவர் மீதான வழக்கு ஜூன் 8ஆம் தேதிக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.