புதுவகை கடன் மோசடி மூலம் $200,000க்கும் மேல் பணம் பறிப்பு

புதுவகை கடன் மோசடி மூலம் $200,000க்கும் மேல் பணம் பறிப்பு

2 mins read
e159f5a9-18ad-4310-ada5-680daaaf90f4
செயல்பாட்டு அல்லது பரிமாற்றக் கட்டணம் கேட்டு, அரசு நீதிமன்றங்கள் அல்லது சிங்கப்பூர் நாணய ஆணையம் போன்ற அரசாங்க அமைப்புகளிடம் இருந்து அனுப்புவதுபோல் போலியான கடிதங்கள் அல்லது மின்னஞ்சல்களை மோசடிப் பேர்வழிகள் அனுப்புவர். படங்கள்: சிங்கப்பூர் போலிஸ் படை -

புதுவகை கடன் மோசடி மூலம் இவ்வாண்டின் முதல் நான்கு மாதங்களில் $200,000க்கும் அதிகமான பணம் பறிபோனது. அதன் தொடர்பில் குறைந்தது 20 பேர் போலிசில் புகார் அளித்துள்ளனர்.

அவ்வகை மோசடி குறித்துப் பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி போலிஸ் அறிவுறுத்தி இருக்கிறது.

கடன் வழங்குவதாக முன்பின் அறியாதவர்களிடம் இருந்து வரும் குறுஞ்செய்தி அல்லது இணையத்தளங்கள் அல்லது விளம்பரங்கள், இந்த மோசடியின் முதல் படி. அதை நம்பி ஒருவர் தொடர்புகொள்ளும் பட்சத்தில், ஒரு வாட்ஸ்அப் உரையாடலுக்கு மாறும்படி

அவர் திருப்பிவிடப்படுவார். அப்போது, கடன் விண்ணப்பத்தைச் செயல்படுத்த தனிப்பட்ட விவரங்களைத் தரும்படி மோசடிப் பேர்வழிகள் கேட்பர்.

அதன்பின், செயல்பாட்டு அல்லது பரிமாற்றக் கட்டணம் கேட்டு, அரசு நீதிமன்றங்கள் அல்லது சிங்கப்பூர் நாணய ஆணையம் போன்ற அரசாங்க அமைப்புகளிடம் இருந்து அனுப்புவதுபோல் போலியான கடிதங்கள் அல்லது மின்னஞ்சல்களை அவர்கள் அனுப்புவர்.

"கடன் தொகையை வழங்கும் முன் குறிப்பிட்ட விதிமுறைகளின்கீழ் செயல்பாட்டுக் கட்டணம் அல்லது வரி செலுத்த வேண்டும் என அக்கடிதங்களில் குறிப்பிடப்பட்டு இருக்கலாம். கடன் தொகை வந்து சேராத பின்னரே பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர்," என்று போலிஸ் விவரித்தது.

சிங்கப்பூர் உயர் நீதிமன்ற அல்லது அனைத்துலக போலிஸ் அதிகாரிகள்போல் நடித்தும், இவ்வாண்டின் முதல் நான்கு மாதங்களில் $3.9 மில்லியனுக்கும் மேலான தொகையை மோசடிப் பேர்வழிகள் சுருட்டிவிட்டனர்.

போலி வேலை விளம்பரம், வங்கிக் கணக்குகள் தற்காலிகமாக முடக்கம் போன்ற குறுஞ்செய்திகளை அனுப்பி இடம்பெறும் மோசடிகள் குறித்தும் போலிஸ் எச்சரித்து உள்ளது.

குறிப்புச் சொற்கள்