சிங்கப்பூரில் விசாக தின வழிபாடு களின் ஒரு பகுதியாக இணையம் வழி மாபெரும் தியான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
சிங்கப்பூர் புத்திஸ்ட் மிஷன் என்னும் பெளத்த அமைப்பு முதல்
முறையாக ஏற்பாடு செய்த அந்த மெய்நிகர் நிகழ்வில் இளையரும் முதியோருமாக 800க்கும் மேற்பட்டோர் 'ஸூம்' வழியாக இணைந்தனர்.
உலகிலுள்ள எல்லா உயிர்
களுக்கும் அன்பும் கருணையும் நிறைந்த சிந்தனைகளைப் பரப்பும் வகையில் மாபெரும் தியான அமர்வு நடைபெற்றது.
இந்த தியானப் பிரார்த்தனையில் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகமும் கலந்துகொண்டார்.
இணையம் வாயிலாக விசாக தினக் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டது வழிபாட்டின் சாராம்சத்தில் எவ்வித மாற்றத்தையும் ஏற்
படுத்தவில்லை என்று அவர் கூறினார்.
"போற்றுதலுக்குரிய புத்தரின் போதனைகளைப் பிரதிபலித்து நற்காரியங்களில் ஈடுபடுவது, அமைதி, அன்பு, கருணை ஆகியவை தொடர்பான சிந்தனைகளைப் பரப்புவது ஆகிய எதுவும் மாறவில்லை," என்றார் திரு சண்முகம்.
புத்தரின் பிறப்பை நினைவு
கூரும் வகையில் கடைப்பிடிக்கப்படும் விசாக தின இணையம் வழி பிரார்த்தனை நிகழ்வுக்கு 15 வயது முதல் 35 வயது வரையிலான இளையர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
விசாக தின இசை நிகழ்ச்சி ஒன்றும் இணையம் வழி அரங்கேறியது. சிங்கப்பூரிலும் வெளிநாடு
களிலும் உள்ள பத்துக்கும் மேற்பட்ட பௌத்த இசையமைப்பாளர்கள் அதனைப் படைத்தனர்.
ஒரு மீட்டர் இடைவெளி விட்டு தியானம் செய்வதைக் குறிக்கும் வகையில் நிகழ்வின் கருப்பொருள் அமைந்திருந்தது. கொள்ளைநோய் பரவலிலிருந்து தற்காக்க இப்படிப்பட்ட சூழலில் விசாக தினக் கொண் டாட்டங்கள் இரண்டாம் ஆண்டாக நடைபெற்றன.
மேலும், சிங்கப்பூர் முழுவதும் உள்ள பௌத்த ஆலயங்களும் விசாக தின வழிபாட்டு நிகழ்வுகளை இணையம் வழி நேரலையாகக் காண்பிக்க ஏற்பாடு செய்திருந்தன.
ஒரே நேரத்தில் ஆயிரக்கணக் கானோர் ஒன்றுகூடிப் பிரார்த்திப்
பதைத் தவிர்க்க கடந்த ஆண்டும் இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு 'சர்கிட் பிரேக்கர்' என்னும் கொள்ளைநோய் முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருந்தபோது விசாக தினம் வந்ததால் கட்டுப்பாடுகள் இப்போதைக் காட்டிலும் கடுமையாக இருந்தன.
இவ்வாண்டு அவ்வாறில்லாமல் பௌத்த ஆலயங்கள் வழிபாட்டுக்காகத் திறந்திருந்தன.
ரிவர் வேலியில் உள்ள சிங்கப்பூர் புத்திஸ்ட் லாட்ஜ் ஆலயம் நேற்று பிற்பகல் 12.30 மணிக்குப் பிறகு வழிபாட்டுக்குத் திறக்கப்பட்டது. முன்னதாக, பௌத்த பிக்குகள் வழிநடத்திய விசாக தின வழிபாட்டு சடங்குகள் அங்கு நடைபெற்றன.
அதே நேரம் இதர பௌத்த ஆலயங்கள் இணையம் வழி முன்
பதிவு செய்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கின. அதிகபட்சம் 50 பேர் வரை அதன் மூலம் அனு மதிக்கப்பட்டனர்.
பௌத்த சமயம் சிங்கப்பூரின் ஆகப்பெரியது. ஒரு மில்லியனுக்கு மேற்பட்டோர் பெளத்த போதனை
களைப் பின்பற்றுகிறார்கள்.