அங்கீகாரம், நல்வாழ்வு: கால்நடை மருத்துவத் துறை எழுப்பும் குரல்கள்

அங்கீகாரம், நல்வாழ்வு: கால்நடை மருத்துவத் துறை எழுப்பும் குரல்கள்

2 mins read
8e347f4c-74a5-4059-b2a2-d5a773fe849e
-

தரத்தை உயர்த்­தும் வகை­யில் தங்­க­ளது பணி முறைப்­ப­டுத்­தப்­பட வேண்­டும் என சிங்­கப்­பூ­ரில் கால்­நடை மருத்­து­வத் துறை­யில் பணி­பு­ரி­யும் பெரும்­பா­லான தாதி­ய­ரும் தொழில்­நுட்­ப­ர்களும் கேட்­டுக் கொண்­டுள்­ள­னர்.

சிங்­கப்­பூ­ரில் 1,000 முதல் 1,500 வரை­யி­லான அத்­த­கைய தாதி­ய­ரும் தொழில்­நுட்­பர்­களும் உள்­ள­னர். வன­வி­லங்­குத் துறை, ஆராய்ச்­சிக் கூடங்­கள், குதி­ரைப் பரா­ம­ரிப்­பி­டங்­கள் போன்­ற­வற்­றில் பணி­பு­ரி­வோ­ரும் இந்த எண்­ணிக்­கை­யில் அடங்­கு­வ­தாக சிங்­கப்­பூர் கால்­நடை மருத்­து­வத் தாதி­யர் மற்­றும் தொழில்­நுட்­பர்­கள் சாச­னம் என்­னும் அமைப்­பின் உறுப்­பி­னர் இவோன் யோங் தெரி­வித்­தார். சிங்­கப்­பூர் கால்­நடை மருத்­து­வச் சங்­கத்­தின் ஓர் அங்­க­மாக இந்த அமைப்பு கடந்த மாதம் தொடங்­கப்­பட்­டது.

தங்­க­ளது நிபு­ணத்­து­வப் பணி இங்கு முறைப்­ப­டுத்­தப்­பட்ட ஒன்­றல்ல என்று கூறும் இந்த 35 வயது தாதி, சன்­செட் வேயில் உள்ள 'த அனி­மல் கிளி­னிக்' கால்­நடை மருந்­த­கத்­தில் வேலை செய்­கி­றார். குறிப்­பாக இந்த வேலைக்­கான குறைந்­த­பட்ச கல்­வித்­த­குதி எது­வும் நிர்­ண­யிக்­கப்­ப­ட­வில்லை என்­பது இவ­ரது கருத்து.

மேலும், இத்­துறை தாதி­ய­ருக்­கான சம்­ப­ளம் எது­வும் வரை­ய­றுக்­கப்­ப­டு­வ­தில்லை என்­றும் பொது­வாக $1,800 முதல் $3,000ஐ தொடும் அள­வி­லேயே அது இருப்­ப­தா­க­வும் இவர் கூறி­னார்.

எங்­க­ளது வேலையை அங்­கீ­

க­ரித்து மதிக்க வேண்­டிய அவ­சி­யம் உள்­ளது," என்­கி­றார் திரு­வாட்டி யோங்.

மருத்­து­வர்­க­ளின் நல­னை­யும்

பரி­சீ­லிக்க கோரிக்கை

இதற்­கி­டையே, தற்­போது நடத்­தப்­பட்டு வரும் மறு­ஆய்­வில் தங்­க­ளது நல்­வாழ்வு தொடர்­பான அம்­சங்­களும் பரி­சீ­லிக்­கப்­பட வேண்­டும் என கால்­நடை மருத்­து­வர்­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

கால்­நடை மருத்­து­வத் துறை­யில் உள்ள விவ­கா­ரங்­க­ளைக் கவ­னித்து தரத்தை உயர்த்­தும் நோக்­கத்­து­டன் விலங்கு மற்­றும் கால்­நடை மருத்­து­வச் சேவை (ஏவி­எஸ்) அமைப்­பும் சிங்­கப்­பூர் கால்­நடை மருத்­து­வச் சங்­க­மும் (எஸ்­விஏ) அந்த மறு­ஆய்­வில் ஈடு­பட்­டுள்­ளன.

கால்­நடை மருத்­து­வத் துறை­யி­ன­ரின் சவால்களும் விருப்­பங்­களும் மறு­ஆய்­வின்­போது கவ­னத்­தில் எடுத்­துக்­கொள்­ளப்­படும் என்று இவ்­விரு அமைப்­பு­களும் இவ்­வாண்டு தொடக்­கத்­தில் அறிக்கை வாயி­லா­கத் தெரி­வித்து இருந்­தன.

ஒரு­சில ஆண்­டு­கள் இடை­வெ­ளி­யில் நடத்­தப்­படும் மறு­ஆய்வு, செல்­லப் பிரா­ணி­கள் வளர்ப்­போ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரும் வேளை­யில் கடந்த ஆண்டு தொடங்­கப்­பட்­டது. இவர்­க­ளின் எண்­ணிக்கை வளர்­வ­தற்கேற்ப பரா­ம­ரிப்­புக்­கான தேவை­யும் அதி­க­ரித்து வரு­கிறது.

சிங்­கப்­பூ­ரில் தற்­போது சுமார் 100 கால்­நடை மருந்­த­கங்­களும் 400க்கும் மேற்­பட்ட கால்­நடை மருத்­து­வர்­களும் உள்­ள­னர்.