வீட்டிற்கு வெளியே விளையாடிய பிள்ளைகள்; கைதான தாயார்
போதைப்பொருள் தொடர்பான வேட்டையின்போது செங்காங் கில் உள்ள ஒரு வீட்டில் 31 வயது மாது ஒருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். ஃபெர்ன்வேல் ரோட்டில் உள்ள அந்த வீட்டில் 45 வயது ஆடவர் ஒருவரும் கைதா னார். இருவரும் சிங்கப்பூரர்கள். அங்கு நடத்தப்பட்ட சோதனையில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றின் மதிப்பு கிட்டத்தட்ட $944,000. போதைப்பொருள்களில் ஆக அதிகமாக 5.6 கிலோ எடையுள்ள ஹெராயின் சிக்கியது. இது ஹெராயின் புழங்கக்கூடிய சுமார் 2,700 பேருக்கு ஒரு வார காலத்திற்குப் போதுமான அளவு. பெண்ணைக் கைது செய்தபோது அவரது இரு குழந்தைகளும் அருகில் விளையாடிக்கொண்டு இருந்தன. 11 வயது சிறுவனும் 10 வயது சிறுமியும் பின்னர் அவர்களின் உறவினரின் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டனர். முன்னதாக, அவ்விரு குழந்தைகளின் நல்வாழ்வை உறுதி செய்யும் நோக்கில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (சிஎன்பி) கூறியது.
"போதைப்பொருள் தொடர்பான இதுபோன்ற பல சம்பவங்களில் குழந்தைகள் துரதிருஷ்டவசமாகப் பாதிக்கப்படுகிறார்கள். போதைப்பொருள் கடத்திகள் தங்களது சுயநலமான, தீங்கு விளைக்கக்கூடிய செயல்கள் மூலம் மற்றவர் களின் வாழ்வை அழிப்பதோடு தங்களது சொந்தக் குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் துன்பத்தைத் தருகின்றனர்," என சிஎன்பி அதிகாரி செபாஸ்டியன் டான் கூறினார்.
இன்னல் களைவதில் இளையர் உதவ முடியும்: ஆல்வின் டான்
எதிர்காலத்தில் வலுவான குடும்பத்தை ஏற்படுத்துவதற்குத் தேவையான வளங்களை அளித்து, குடும்ப ஆலோசனைகளில் இளையருக்கு முக்கிய இடம் தரவேண்டும் என
கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சர்
ஆல்வின் டான் தெரிவித்துள்ளார். குறிப்பாக, தற்போதைய கொவிட்-19 சூழலில் குடும்பங்களை இன்னல்களிலிருந்து காப்பாற்ற உதவுவதோடு தலைமுறைகளுக்கு இடையிலான பிணைப்புகளை வலுப்படுத்துவதிலும் இளையர்கள் முக்கிய பங்காற்ற முடியும் என்றார் அவர். ஃபேம்சேம்ப்ஸ் என்னும் சமூக இளையர் இயக்கம் நடத்திய மாநாட்டில் அவர் இக் கருத்தை வெளியிட்டார்.

