மின்னியல் விதிகள் தனி உரிமைக்கு எதிரானவை - மத்திய அரசு மீது வாட்ஸ்அப் வழக்கு

மின்னியல் விதிகள் தனி உரிமைக்கு எதிரானவை - மத்திய அரசு மீது வாட்ஸ்அப் வழக்கு

2 mins read
82be38c3-ae70-4ba5-9d16-02a008854c98
-

புது­டெல்லி: மத்­திய அர­சின் புதிய மின்­னி­யல் விதி­கள், சமூக ஊட­கப் பய­னர்­க­ளின் தனிப்­பட்ட சுதந்­திர உரி­மைக்கு எதி­ராக உள்­ளதாகக் கூறி 'வாட்ஸ்அப்' நிறு­வ­னம் வழக்கு தொடர்ந்­துள்­ளது.

'ஃபேஸ்புக்', 'வாட்ஸ்­அப்', 'டுவிட்­டர்' மற்­றும் 'யூடி­யூப்' ஆகிய சமூக ஊட­கங்­களில் நாட்­டின் பாது­காப்­புக்­கும் இறை­யாண்­மைக்­கும் எதி­ரா­கத் தக­வல்­கள் பகி­ரப்­ப­டு­வ­தாக புகார்­கள் எழுந்­தன. இத­னை­ய­டுத்து ஓ.டி.டி. தளங்­கள் உள்­ளிட்ட அனைத்து சமூக ஊட­கங்­க­ளை­யும் கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கில் கடந்த பிப்­ர­வ­ரி­யில் ஒழுங்­கு­முறை விதி­களை மத்­திய அரசு வெளி­யிட்­டது.

இதனை ஏற்­றுக்­கொள்­வ­தற்­கான காலக்­கெடு நேற்று முடி­வடைந்த நிலை­யில், விதி­மு­றை­க­ளைப் பின்­பற்­றாத சமூக ஊட­கங்­­க­ளுக்­குத் தடை விதிக்­கப்­ப­டுமா எனக் கேள்­வி எழுந்­துள்­ளது.

இந்­நி­லை­யில், மத்­திய அர­சின் புதிய மின்­னி­யல் கொள்­கைக்கு எதி­ராக டெல்லி உயர்­ நீ­தி­மன்­றத்­தில் வாட்ஸ்­அப் நிறு­வ­னம் வழக்கு தொடர்ந்­துள்­ளது.

"தக­வலை முத­லில் வெளி­யி­டு­பவர் குறித்த விவ­ரங்­களை வழங்­க­வேண்­டும் என்று மத்­திய அரசு கேட்­கிறது. இது அர­சி­யல் சாச­னத்­தின் தனி உரி­மைக்கு எதி­ரா­னது," என்­றும் வாட்ஸ்­அப் நிறு­வ­னம் கூறி­யுள்­ளது. பகி­ரப்­படும் தக­வல்­க­ளின் தடம் அறி­யும் செயல், பய­னர்­க­ளின் தர­வு­க­ளைத் தனி­யார் நிறு­வ­னங்­கள் திரட்ட வழி­வ­குக்­கும் என்­றும் அந்­நி­று­வ­னம் கூறி­யுள்­ளது.

எனவே, இந்­தி­யா­வின் மத்­திய அரசு அறி­மு­கப்­ப­டுத்தி இருக்­கும் புதிய மின்­னி­யல் ஒழுங்­கு­முறை விதி­க­ளுக்­குத் தடை­வி­திக்க உத்­த­ர­விட வேண்­டும் என்று 'வாட்ஸ்அப்' நிறு­வ­னம் தனது மனு­வில் நீதி­மன்­றத்­தைக் கேட்­டுக் கொண்­டுள்­ளது. இவ்­வ­ழக்கு மத்­திய அர­சிற்­கும் சமூக இணைய ஊட­கங்­க­ளுக்­கும் இடை­யே­யான மோதலை வெளிப்­படுத்­து­வ­தாக ராய்ட்­டர்ஸ் செய்தி நிறுவனம் கூறி­யுள்­ளது. கோப்புப்படம்