கொவிட்-19 தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை பொறுத்தவரை உலகின் முதல் 25 நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் விளங்குகிறது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், சா சுவீ ஹாக் பொதுச் சுகாதாரப் பள்ளியின் அனைத்துலக சுகாதாரத்திற்கான துணைத் தலைவர் சு லீ யாங் இதைத் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் சற்று அதிகமானோர் குறைந்தது ஒரு தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளனர். நால்வரில் ஒருவர் இருமுறையும் தடுப்பூசி போட்டுவிட்டனர்.
அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் போதுமான அளவிற்குத் தொடர்ந்து கிடைக்கத் தொடங்கியதும் தடுப்பூசி நடவடிக்கையின் வேகம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று இணைப் பேராசிரியருமான திரு ஹாக் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

