கொரோனா பரவல் சூழலில் சுகாதாரச் சவால்களை எதிர்கொண்டதில் மீட்சித் திறனுடன் செயல்பட்ட 72 முன்மாதிரி நோயாளிகள், பராமரிப்பாளர்கள், நோயாளி ஆதரவுக் குழுக்களுக்கு 'சிங்கப்பூர் சுகாதார முன்மாதிரி நோயாளி, பராமரிப்பாளர் விருதுகள்' வழங்கப்பட்டன.
அவர்களில் 56 வயதான திருவாட்டி உஷா ராணியும் ஒருவர். 16 வயதில் கடும் ஒற்றைத் தலைவலி, பின் பேசவும் நினைவில்கொள்ளவும் சிரமம், மூளையில் இரத்தக் கசிவால் 11 ஆண்டுகளில் மூன்று அறுவை சிகிச்சைகள், கருப்பை நீக்கம் எனப் பல இன்னல்களை எதிர்கொண்ட போதும், 20-50 வயதுக்கு உட்பட்ட பெண் கைதிகளுக்கு நல்வழிகாட்டும் திட்டத் தொண்டூழியராகச் செயல்பட்டு வருகிறார் பிளாங்கா ரைஸ் தொடக்கப் பள்ளி ஆசிரியரான திருவாட்டி உஷா ராணி.

