நம்பிக்கையின்மையால் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டனர்

நம்பிக்கையின்மையால் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டனர்

1 mins read
4b70bb04-3189-478d-9b23-afb042b934ad
-

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் நடப்­பில் இருந்­த­போ­தும் தங்­கள் பணி­யா­ளர்­களை அலு­வ­ல­கத்­திற்கு வந்து வேலை செய்­யும்­படி ஒரு சில நிறு­வ­னங்­கள் கேட்­டுக்­கொண்­ட­தாகக் கூறப்­ப­டு­கிறது.

வீட்­டில் இருந்து வேலை செய்­வதில் முத­லா­ளி­க­ளின் நம்­பிக்­கை­ இல்லாமை, பணி­யி­டத்­தில் அதிக உற்­பத்­தித்­தி­றன் கொண்­ட­வர்­க­ளாக இருப்­பதாக முத­லா­ளி­கள் நம்­பு­வது, நிறு­வ­னக் கொள்­கை­யில் நீக்­குப்­போக்­குத்­தன்மை குறைவு ஆகி­ய­வையே அதற்கு முக்­கி­யக் கார­ணங்­க­ளா­கச் சொல்­லப்­ப­டு­கின்­றன.

சமூ­கத்­தில் கொவிட்-19 தொற்று பர­வு­வ­தைக் கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கில் கடும் கட்­டுப்­பா­டு­கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அதன்­படி, குறிப்­பிட்ட கரு­வி­யின் சேவை தேவைப்­படும் ஊழி­யர்­கள் மட்­டுமே பணி­யி­டங்­களில் இருந்­த­வாறு வேலை செய்­ய­லாம். ஊழி­யர்­கள் வீட்­டிலிருந்து வேலை செய்­வதை இயல்­பு­நி­லை­யாக நிறு­வ­னங்­கள் கருத வேண்­டும்.

அண்­மை­யில், பணி­யா­ளர்­கள் வீட்­டில் இருந்து வேலை செய்­வதை உறு­தி­செய்­யாத 11 நிறு­வ­னங்­களுக்கு மனி­த­வள அமைச்சு தலா ஆயி­ரம் வெள்ளி அப­ரா­தம் விதித்­தது குறிப்­பி­டத்­தக்­கது.