சிங்கப்பூரில் உள்ள ஆறு நீர்த்தேக்கங்களைக் கண்காணிக்க ஆளில்லா வானூர்திகள் பயன்
படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது அன்றாட நட
வடிக்கைகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த பொதுப் பயனீட்டுக் கழகம் எடுக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்று.
இம்மாத இறுதியில் மெக்ரிட்சி மற்றும் மரினா நீர்த்தேக்கங்களில் கண்காணிப்புப் பணிக்காக ஆளில்லா வானூர்தி பயன்படுத்தப்படும். அதனைத் தொடர்ந்து இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் சிராங்கூன், கிராஞ்சி, லோவர் சிலேத்தார், லோவர் பியர்ஸ் ஆகிய நீர்த்தேக்கங்களின் மேல் ஆளில்லா வானூர்திகள் பறக்கவிடப்படும்.
கண்காணிப்புப் பணிகளுக்
காகப் பயன்படுத்தப்படும் இந்த ஆளில்லா வானூர்திகளில் உணர் கருவிகளும் கேமராவும் பொருத்தப்பட்டிருக்கும் என்று கழகம் கூறியது.
தண்ணீரின் தரத்தைக் கண்காணிக்கவும் மீன்பிடித்தல், படகு வலித்தல் போன்ற நீர்நிலை நட
வடிக்கைகளைக் கண்காணிக்கவும் இந்த அம்சங்கள் உதவும் என்று தெரிவிக்கப்பட்டது.
நீர்த்தேக்கங்களின் அளவு, அங்கு நடைபெறும் நீர்நிலை நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த ஆறு நீர்த்தேக்கங்கள் தேர்வு செய்யப்பட்டதாக கழகத்தின் செய்தி
தொடர்பாளர் தெரிவித்தார்.
தற்போது, இந்த நீர்த்தேக்கங்களில் கழகத்தின் அதிகாரிகள் நேரில் சென்று கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனர். நீர்த் தாவரங்கள் அளவுக்கு அதிகமாக வளர்ந்திருக்கின்றனவா என்பதை அவர்கள் நேரில் சென்று பார்த்து அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக
கழகம் கூறியது. அதுமட்டுமல்லாது, நீர்நிலை நடவடிக்கைகள் பாதுகாப்பான முறையில் நடை
பெறுகின்றனவா என்பதையும் அவர்கள் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆறு நீர்த்தேக்கங்களுக்கும் அதிகாரிகள் நேரில் சென்று கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட ஓர் ஆண்டுக்கு 7,200 மணி நேரம் செலவழிக்கப்படுவதாக கழகம் கூறியது.
கண்காணிப்புப் பணிகளுக்கு ஆளில்லா வானூர்திகளைப் பயன்
படுத்தினால் ஓர் ஆண்டுக்கு 5,000 மணி நேரத்தை மிச்சப்படுத்தலாம் என்று அது நம்புகிறது.
"கண்காணிப்புப் பணிகளில் ஆளில்லா வானூர்திகளைப் பயன்
படுத்துவதன் மூலம் நீர்த்தேக்கங்களின் நுழைவாயில்கள், நீரேற்று இயந்திரம் (பம்ப்), தடுக்கிதழ் (வால்வ்) ஆகியவற்றுக்கான பராமரிப்புப் பணிகள் போன்ற முக்கிய வேலைகளில் அதிகாரிகள் கவனம் செலுத்தலாம். அதுமட்டுமல்லாது, பிரச்சினை ஏற்படுவதற்கு முன்பு ஆளில்லா வானூர்திகள் எச்சரிக்கை ஒலி எழுப்பும்," என்று பொதுப் பயனீட்டுக் கழகத்தின் நீர்ப்பிடிப்பு, நீர்நிலைப் பிரிவின் இயக்குநர் திரு இயோ கெங் சூன் தெரிவித்தார்.
ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்தி கடந்த ஆண்டு
சோதனைமுறை கண்காணிப்புப் பணிகள் நடத்தப்பட்டன. எஸ்டி இஞ்சினியரிங் உருவாக்கிய மென்பொருளைக் கொண்டு இந்த ஆளில்லா வானூர்திகள் இயக்கப்
படுகின்றன.
தண்ணீரின் தரத்தைப் பகுப்பாய்வு செய்யவும், அனுமதி வழங்கப்படாத இடங்களில் மீன்பிடிப்
பவர்களைக் கண்டுபிடிக்கவும் இந்த மென்பொருள் உதவுகிறது. பிரச்சினைகள் எழுந்தால் டெலி
கிராம் செயலி மூலம் அதிகாரி
களின் கைபேசிகளுக்கு தகவல் அனுப்பிவைக்கப்படும்.
பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியவற்றுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க இந்த அணுகுமுறை வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

