சேவைத் துறை வருமானம் 1.5 விழுக்காடு வீழ்ச்சி

சேவைத் துறை வருமானம் 1.5 விழுக்காடு வீழ்ச்சி

2 mins read
4b2717f0-776f-4144-b2a9-da6f93e741ac
-

சிங்­கப்­பூ­ரின் சேவைத் துறை இவ்­வாண்­டின் முதல் காலாண்­டில் ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் 1.5 விழுக்­காடு சரி­வைப் பதிவு செய்­துள்­ளது. இந்­தத் தக­வலை சிங்­கப்­பூர் புள்­ளி­வி­வ­ரத் துறை நேற்று வெளி­யிட்­டது.

கடந்த ஆண்டு இறு­திக் காலாண்­டில் சேவைத் துறை சந்­தித்த வீழ்ச்­சி­யு­டன் ஒப்­பி­டும்­போது இந்­தச் சரிவு குறைவு. கடந்த ஆண்டு இறு­திக் காலாண்­டில் ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் அத்­துறை 7.6 விழுக்­காடு சரி­வைப் பதிவு செய்­தது.

தக­வல்-தொடர்பு, நிதி-காப்

­பு­றுதி, கல்வி ஆகி­ய­வற்­றைத் தவிர மற்ற சேவைத் துறைப் பிரி­வு­கள் ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் குறை­வான வரு­மா­னம் ஈட்­டி­ய­தாக புள்­ளி­வி­வ­ரத் துறை தெரி­வித்­தது.

மொத்த வர்த்­த­கம், சில்­லறை வர்த்­த­கம், ஹோட்­டல்­கள், உண­வுச் சேவை­கள் ஆகி­யவை இதில் சேர்க்­கப்­ப­ட­வில்லை. இவ்­வாண்­டின் முதல் காலாண்­டில் காலாண்­டுக்­குக் காலாண்டு அடிப்­ப­டை­யில் ஒட்­டு­மொத்த வர்த்­த­கம் 0.6 விழுக்­காடு வீழ்ச்சி கண்­டது. நிர்­வா­கம் மற்­றும் ஆத­ர­வுச் சேவை­கள் ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் ஆக மோச­மாக 19.9 விழுக்­காடு வரு­மான வீழ்ச்­சி­யைக் கண்­டது. கட்­டு­மா­னம் மற்­றும் விமா­னப் போக்கு­வ­ரத்­துச் சாத­னங்­க­ளின் தேவை குறைந்­த­தால் இந்த நிலை ஏற்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது. பொழு­து­போக்கு மற்­றும் தனிநபர் சேவை­கள் ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் 18.8 விழுக்­காடு சரி­வைக் கண்­டன. கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யால் ஏற்­பட்­டுள்ள பய­ணக் கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக உல்­லா­சத் தளங்­கள் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தால் இந்­நிலை ஏற்­பட்­டுள்­ள­தாகப் பொரு­ளி­யல் நிபு­ணர்­கள் கூறி­னர். அண்­மை­யில் நடை­

மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள விதி­

மு­றை­கள் சமூக ஒன்­று­கூ­டல்­க­ளை­யும் பொழு­து­போக்கு நட­வ­டிக்­கை­

க­ளை­யும் கட்­டுப்­ப­டுத்­து­வ­தால் சேவைத் துறை தொடர்ந்து பாதிக்­கப்­படும் என்று மேபேங்க் கிம் எங்கைச் சேர்ந்த மூத்த பொரு­ளி­யல் நிபு­ணர் சுவா ஹாக் பின் தெரி­வித்­தார்.