ஈசூன் மாரியம்மன் கோயில் வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

ஈசூன் மாரியம்மன் கோயில் வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

3 mins read
08ee1e66-fc92-40b9-bee5-24d2bd39946a
2018ஆம் ஆண்டில் திரு சுப்பிரமணியம் கருப்பையா தேவர் ஒருதலைப்பட்சமாக அவசரநிலை பொதுக் கூட்டத்தை நடத்தியது முறையாகாது என்று நீதிபதி தெரிவித்தார். மேலும் அடுத்த நிர்வாகக் குழு தேர்தல் அடுத்த மாதம் நடைபெற இருப்பதால் இந்த வழக்கு தேவையற்றது என்று நீதிபதி தீர்ப்பளித்து வழக்கைத் தள்ளுபடி செய்தார்.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஈசூ­னில் உள்ள ஸ்ரீ மஹா

மாரி­யம்­மன் கோயிலை நிர்­வ­கிக்க இரண்டு தரப்­பி­ன­ருக்குமிடையே ஏற்­பட்ட சச்­ச­ரவு கார­ண­மாக நீதி­மன்­றத்­தில் வழக்கு தொடுக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில், இந்த வழக்கு தேவை­யற்­றது என்று நேற்று தீர்ப்­

ப­ளித்த நீதி­மன்­றம், அதை தள்­ளு­படி செய்­தது.

இந்த வழக்கு நீதி­மன்­றத்­துக்கே வந்­தி­ருக்­கக்­கூ­டாது என்று நீதி­பதி சூ ஹான் டெக் தெரி­வித்­தார்.

ஒரு தரப்­பில் கோயி­லின் நிறு­வ­ன­ரும் நீண்­ட­கா­லத் தலை­வ­ராக இருந்­த­வ­ரு­மான அம­ரர் திரு­வாட்டி கே. கல்­யா­ணி­யின் சகோ­த­ர­ரான திரு சுப்­பி­ர­ம­ணி­யம் கருப்­பையா தேவர் இடம்­பெற்­றார்.

இன்­னொரு தரப்­பில் 2017ஆம் ஆண்­டில் திரு­வாட்டி கல்­யா­ணி­யின் மறை­வுக்­குப் பிறகு கோயில் நிர்­வா­கக் குழு உறுப்­பி­னர்­க­ளா­கத் தேர்வு செய்­யப்­பட்ட நால்­வர் இடம்­பெற்­ற­னர்.

2017ஆம் ஆண்­டில் முறை­யற்ற வகை­யில் நிர்­வா­கக் குழு உறுப்­பி­னர்­கள் தேர்வு செய்­யப்­பட்­ட­தாக அதி­ருப்­திக் குரல்­கள் எழுந்­ததை அடுத்து சர்ச்சை ஏற்­பட்­டது.

அத­னைத் தொடர்ந்து, தேர்­தல் நடத்­தப்­பட வேண்­டும் என்று கோயில் உறுப்­பி­னர்­கள் சிலர் அழைப்பு விடுத்­த­னர்.

இந்­நி­லை­யில், 2018ஆம் ஆண்டு செப்­டம்­பர் மாதத்­தில் திரு சுப்­பி­ர­

ம­ணி­யம் ஒரு­த­லைப்­பட்­ச­மாக

அவ­ச­ரநிலை பொதுக் கூட்­டத்தை

கூட்­டி­னார்.

நிர்­வா­கக் குழு­வில் இருந்த 11 பேரைப் பதவி நீக்­கம் செய்து திரு சுப்­பி­ர­ம­ணி­யத்­தைத் தலை­வ­ரா­கத் தேர்ந்­தெ­டுத்து, புதிய நிர்­வா­கக் குழு­வைத் தேர்வு செய்ய அந்­தக் கூட்­டத்­தில் கலந்­து­கொண்ட 40 பேர் வாக்­க­ளித்­த­னர்.

2019ஆம் ஆண்டு மே மாதத்­தில் நான்கு நிர்­வா­கக் குழு உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக திரு

சுப்­பி­ர­ம­ணி­யம் வழக்கு தொடுத்­தார்.

அவர்­களில் முன்­னாள் கோயில் தலை­வ­ரான என். ஆனந்­த­ரா­ஜா­வும் தற்­போ­தைய தலை­வ­ரான ஆர். மகேந்­தி­ர­னும் அடங்­கு­வர்.

கோயி­லுக்­குச் சொந்­த­மான ஆவ­ணங்­க­ளை­யும் சொத்­து­க­ளை­யும் தம்­மி­டம் அவர்­கள் ஒப்­ப­டைக்க வேண்­டும் என்று உயர் நீதி­மன்­றத்­தி­டம் திரு சுப்­பி­ர­ம­ணி­யம்

கேட்­டுக்­கொண்­டார்.

கோயில் நிர்­வாக உறுப்­பி­னர்­கள் பட்­டி­யல் தொடர்­பா­க­வும் சர்ச்சை ஏற்­பட்­டது.

திரு சுப்­பி­ர­ம­ணி­யம் வைத்­தி­ருந்த பட்­டி­ய­லில் நான்கு ஆயுட்­கால உறுப்­பி­னர்­களும் 108 சாதா­ரண உறுப்­பி­னர்­களும் இடம்­பெற்­ற­னர்.

மாறாக, பிர­தி­வா­தி­கள் வைத்­தி­ருந்த பட்­டி­ய­லில் 96 உறுப்பி னர்­கள் இடம்­பெற்­ற­னர்.

2018ஆம் ஆண்­டில் நிர்­வா­கக் குழு­வின் ஒப்­பு­த­லின்றி முறை­யற்ற வகை­யில் அவ­ச­ர­நிலை பொதுக் கூட்­டம் நடத்­தப்­பட்­ட­தாக நீதி­பதி கூறி­னார்.

விதி­மு­றைப்­படி இரண்டு ஆண்டு களுக்கு ஒரு­முறை நடத்­தப்­படும் வரு­டாந்­திர பொதுக் கூட்­டத்­தில் நிர்­வா­கக் குழு தேர்வு செய்­யப்­படும்.

"நிர்­வா­கக் குழுவை நீக்க கோயில் உறுப்­பி­னர்­கள் தங்­கள் விருப்­பப்­படி ஒரு­த­லைப்­பட்­ச­மாக அவ­ச­ர­நிலை பொதுக் கூட்­டத்தை நடத்த முடி­யாது. புதிய நிர்­வா­கக் குழு­வைத் தேர்ந்­தெ­டுக்க அவர்­கள் அடுத்த தேர்­த­லுக்­குக் காத்­தி­ருக்க வேண்­டும்," என்­றார் நீதி­பதி சூ.

பட்­டி­யல்­களை உறு­தி­செய்த வர்­களை சாட்­சி­க­ளாக அழைக்

காத­தால் சட்­ட­பூர்வ உறுப்­பி­னர் யார் என்­பதை இரு தரப்­பி­ன­ரா­லும் நிரூ­பிக்க முடி­யாது என்­றார் அவர்.

2019ஆம் ஆண்டு ஜூன் மாதத்­தில் நடை­பெற்ற தேர்­த­லில் திரு சுப்­பி­ர­ம­ணி­யம் போட்­டி­யிட்­டி­ருந்­தால் இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்பே இந்த விவ­கா­ரத்­துக்­குத் தீர்வு கிடைத்­தி­ருக்­கும் என்­றார் நீதி­பதி.

அடுத்த வரு­டாந்­திர பொதுக் கூட்­டம் அடுத்த மாதம் நடை­பெற இருப்­ப­தால் இந்த வழக்கு தேவை­யற்­றது என்று சம்­பந்­தப்­பட்­ட­வர்

களின் வழக்­க­றி­ஞர்­க­ளி­டம் கடந்த மார்ச் மாதம் 8ஆம், ஏப்­ரல் 20ஆம் தேதி­களில் தெரி­வித்­தி­ருந்­த­தாக நீதி­பதி கூறி­னார்.

ஆனால் வழக்கு தொடர

தங்­கள் கட்­சிக்­கா­ரர்­கள் விரும்­பு­வ­தாக வழக்­க­றி­ஞர்­கள் கூறி­யதை நீதி­பதி சுட்­டி­னார்.

இந்த வழக்கு தேவை­யற்­றது என்று நேற்று மீண்­டும் வலி­யு­றுத்­திய நீதி­பதி சூ, எதிர்­கா­லத்­தில் இத்­த­கைய பிரச்­சினை ஏற்­ப­டா­மல் இருக்க அடுத்த மாதம் நடை

பெறும் தேர்­தல் முறை­யாக நடத்­தப்­ப­டு­வதை இரு தரப்­பி­ன­ரும் உறுதி செய்ய வேண்­டும் என்று அவர் கூறி­னார்.