பெண்களை அவமதிக்கும் ஆய்வுக்கு எதிராக கண்டனக் குரல்கள்

பெண்களை அவமதிக்கும் ஆய்வுக்கு எதிராக கண்டனக் குரல்கள்

3 mins read
00528c5e-80a6-4cd9-b860-d88deb34eabc
-

பெண் இஸ்­லா­மிய சமய ஆசி­ரி­யர்­களை அவ­ம­திக்­கும் வகை­யில் சமூக ஊட­கத்­தில் நடத்­தப்­பட்ட ஆய்­வுக்கு நாடா­ளு­மன்ற உறுப்

பினர்­களும் இஸ்­லா­மிய சமய ஆசி­ரி­யர்­களும் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ள­னர்.

பெண் இஸ்­லா­மிய சமய ஆசி­ரி­யர்­கள் சில­ரைப் பட்­டி­ய­லிட்டு பாலி­யல் ரீதி­யி­லான ஈர்ப்பை

முன்­னி­லைப்­ப­டுத்தி அவர்­க­ளைத் தர­வ­ரி­சைப்­ப­டுத்த பொது

மக்­க­ளைக் ஆய்வு கேட்­டுக்­கொண்­டது. பட்­டி­ய­லில் குறைந்­தது 12 பெண் இஸ்­லா­மிய சமய ஆசி­ரி­யர்­கள் தர­வ­ரி­சைப்­ப­டுத்­தப்

பட்­டி­ருந்­த­தா­க­வும் ஆய்­வில் 1,005 பேர் பங்­கெ­டுத்­த­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது. இந்த ஆய்­வைப் பற்றி இன்ஸ்­ட­கி­ராம் பதிவு மூலம் உஸ்­தாஸ் முகம்­மது ஸாஹிட் முகம்­மது ஸின் நேற்று முன்­

தி­னம் அதி­ருப்தி தெரி­வித்­தார்.

"இந்த ஆய்­வின் கார­ண­மா­கப் பெண் இஸ்­லா­மிய சமய ஆசி­ரி­யர் ஒரு­வர் மன­வு­ளைச்­சல் அடைந்து என்­னு­டன் தொடர்­பு­கொண்டு விவ­ரம் தெரி­வித்­தார். தக­வல் அறிந்­த­தும் நான் அதிர்ச்சி அடைந்­தேன். செய­லி­யில் பட்டி

யலி­டப்­பட்­டுள்ள அனை­வ­ரும் உள்­ளூர் பெண் இஸ்­லா­மிய சமய ஆசி­ரி­யர்­கள். இந்த முறை­யற்ற செய­லுக்­குக் கார­ண­மா­ன­வ­ரை அடை­யா­ளம் கண்டு அவ­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்," என்­றார் உஸ்­தாஸ் ஸாஹிட். இதற்­கி­டையே, சிங்­கப்­பூர் இஸ்­லா­மிய சமய மன்­றத்­தில் (முயிஸ்) உள்ள முஃப்தி அலு­

வ­லகத்­தின் துணை இயக்­கு­ந­ரான உஸ்­தாஸ் இர்­வான் ஹாடி­யும் ஆய்­வுக்கு எதி­ராக தமது கண்­ட­னத்­தைப் பதிவு செய்­துள்­ளார்.

ஆய்­வுக்­குக் கார­ண­மா­ன­வர்­கள் சட்­டப்­படி கடு­மை­யாக

தண்­டிக்­கப்­பட வேண்­டும் என அவர் கேட்­டுக்­கொண்­டார்.

உஸ்­தாஸ் இர்­வா­னின் பதிவு குறித்து கருத்து தெரி­வித்த சுவா சூ காங் குழுத் தொகுதி

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுல்­கார்­னைன் அப்­துல் ரஹீம், ஆய்வை நடத்­தி­ய­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டும் என்­பதை வலி­யு­றுத்­தி­னார்.

"எங்­கள் பெண்­கள், இஸ்­லா­மிய சம­யக் கல்வி ஆசி­ரி­யர்

களுக்கு எதி­ரான இந்த ஆய்வு முற்­றி­லும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாத ஒன்று. ஆய்வை நடத்­தி­ய­வ­ருக்­கும் ஆய்­வில் பங்­கெ­டுத்­த­வர்­க­ளுக்­கும் எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்," என்­றார் அவர். பெண்­க­ளுக்கு எதி­ராக நடத்­தப்­படும் முறை­யற்ற செயல்­களை எதிர்க்­கும்­படி சுகா­தார அமைச்சு மற்­றும் தொடர்பு, தக­வல் அமைச்­சின் நாடா­ளு­மன்­றச் செய­லா­ளர் ரஹாயு மஹ்ஸாம் தமது ஃபேஸ்புக் பக்­கம் வாயி­லா­கப் பொது­மக்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டார். பெண்­கள் மட்­டு­மல்­லாது, ஆண்­க­ளை­யும் அவ­ம­திப்­பது தவறு என்­பதை இளை­யர்­க­ளுக்­குப் புரிய வைப்­பது அவ­சி­யம் என்று அவர் தமது பதி­வில் குறிப்­பிட்­டார். பெண்­களை சமூ­கம் தொடர்ந்து அவ­ம­தித்­தா­லும் அவர்­க­ளைப் போகப் பொரு­ளா­கக் கரு­தி­னா­லும் பெண்­கள் முன்­னேற்­றத்­துக்­கான அனைத்து முயற்­சி­க­ளுக்­கும் அர்த்­த­மில்­லா­மல் போய்­வி­டும் என்று மக்­கள் செயல் கட்­சி­யின் மக­ளிர் அணி­யின் ஆலோ­ச­க­ரு­மான திரு­வாட்டி ரஹாயு கூறி­னார்.

"சிங்­கப்­பூ­ரில் அனை­வ­ரும் இவ்­வாறு பெண்­க­ளுக்கு எதி­ராக நடந்­து­கொள்­வ­தில்லை என நான் நம்­பு­கி­றேன். ஆனால் பெண்­கள் பற்றி சிலர் தெரி­விக்­கும் கருத்­து­கள் ஏற்­றுக்­கொள்ள முடி­யாத வகை­யில் உள்­ளன. பெண்­களை அவ­ம­திக்­கும் இத்­த­கைய செயல்

களுக்கு எதி­ராக நமது சமூ­கத்­தி­னர், குறிப்­பாக ஆண்­கள் கண்­ட­னம் தெரி­விப்­பது மகிழ்ச்­சி­யைத் தரு­கிறது. இருப்­பி­னும், பெண்­களை மதிக்க வேண்­டும் என்று நமது சமூ­கத்­துக்­குத் தொர்­டந்து கற்­றுக்­கொ­டுக்க வேண்­டும்," என்­றார் திரு­வாட்டி ரஹாயு.

இந்த ஆய்வை நடத்­தி­ய­வர்­

க­ளை­யும் அதில் பங்­கெ­டுத்­த­வர்­

க­ளை­யும் அதி­பர் ஹலிமா யாக்­கோப் மிகக் கடு­மை­யா­கச் சாடி­யுள்ளார்.