4 அம்ச ஆதரவுத் திட்டம் சம்பள மானியம், தற்காலிக நிதியுதவி, வாடகைக் கழிவு, கல்விக் கடனடைப்பு உதவி

4 அம்ச ஆதரவுத் திட்டம் சம்பள மானியம், தற்காலிக நிதியுதவி, வாடகைக் கழிவு, கல்விக் கடனடைப்பு உதவி

2 mins read
6975bbd4-6a13-4886-bd61-1fa101aeedbf
சம்பள மானியம், தற்காலிக நிதியுதவி, வாடகைத் தள்ளுபடி, கல்விக் கடனடைப்பு நிறுத்திவைப்பு ஆகிய நான்கு அம்சங்களுடன் ஆகப் புதிய ஆதரவு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 சமூ­கத் தொற்று அதி­க­மாகி இருப்­ப­தால் ஜூன் 13 ஆம் தேதிவரை கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் நடப்­பில் இருக்­கின்­றன.

இத­னால் நிறு­வ­னங்­களும் தனிப்­பட்­ட­வர்­களும் பாதிக்­கப்­பட்டு இருக்­கி­றார்­கள். இவர்­க­ளுக்கு மேலும் நிதி உத­வி­கள் கிடைக்க இருக்கின்­றன. இந்த $800 மில்­லி­யன் ஆத­ரவுத் திட்­டம் பற்றி நிதி அமைச்சு நேற்று அறி­வித்­தது.

ஊழி­யர்­க­ளைத் தொடர்ந்து வேலை­யில் வைத்­தி­ருக்க ஏது­வாக முத­லா­ளி­க­ளுக்கு மேலும் சம்­பள மானி­யம் வழங்­கு­வது, தனிப்­பட்­ட­வர்­க­ளுக்கு ஒரு தட­வை­யாக பண உதவி செய்­வது, வாட­கைக் கழிவு ஆகி­யவை அந்த ஆத­ரவு உத­வித் திட்­டத்­தில் அடங்­கும்.

வேலை ஆத­ர­வுத் திட்­டத்­தின்­படி கொடுக்­கப்­படும் சம்­பள மானி­யம் நீட்­டிக்­கப்­ப­டு­கிறது.

உணவு, பானத் துறை, மேடைக்­கலைத் துறை மற்­றும் கலைப் படிப்பு, விளை­யாட்­டுத் துறை ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த நிறு­வ­னங்­க­ளுக்கு மே 16ஆம் தேதி முதல் ஜூன் 13 வரை இந்த ஆதரவு 50% ஆகக் கூட்­டப்­ப­டு­கிறது.

கதவை மூட வேண்­டிய தேவை இல்­லாத இதர துறை­ நிறுவனங் களுக்கு இந்த ஆத­ரவு 30%க்கு அதி­க­மாக்­கப்­பட்­டுள்­ளது.

குறைந்த, நடுத்­தர வரு­வாய் ஊழி­யர்­கள், சுய வேலை பார்ப்­போர் ஆகி­யோ­ருக்கு ஒரு முறை வழங்கும் உத­வி­யாக $500 முதல் $700 வரை பணம் கிடைக்­கும். இதன் தொடர்­பி­லான விவ­ரங்­கள விரை­வில் இடம்­பெ­றும்.

வாட­கைக் கழிவு $100 மில்­லி­ய­னுக்­கும் குறைந்த வரு­டாந்­திர வரு­மா­னம் கொண்ட சிறிய, நடுத்­தர நிறுவனங்­க­ளுக்­கும் லாப­நோக்­கற்ற அமைப்­பு­க­ளுக்­கும் கொடுக்­கப்­படும்.

இதன் தொடர்­பான விவ­ரங்­கள் அடுத்த மாதம் நடுப்­ப­கு­தி­யில் சிங்­கப்­பூர் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யத்­தின் இணை­யத்­த­ளத்­தில் வெளி­யி­டப்­படும்.

இவற்­றோடு, கல்­விக் கட­னைத் திருப்பி அடைப்­ப­தற்­குச் சலு­கை­யும் நீட்­டிக்­கப்­பட்­டு உள்­ளது.

கல்­விக் கடன், அதற்­கான வட்டி ஆகி­ய­வற்றை செப்­டம்­பர் 30 வரை மேலும் நான்கு மாதங்­க­ளுக்­குச் செலுத்த வேண்­டாம் என்று கல்வி அமைச்சு அறி­வித்­துள்­ளது.

இந்­தச் சலுகை, அனைத்து தன்­னாட்­சிப் பல்­க­லைக்கழ­கங்­கள், பல­துறை தொழிற்­கல்லூ­ரி­கள் ஆகி­ய­வற்­றுக்­கான பாடக் கட்­டணக் கடன், கல்­விக் கடன், வெளி­நாட்டு மாண­வர் செயல்­திட்­டக் கடன் ஆகி­ய­வற்­றுக்­குப் பொருந்­தும் என்று அமைச்சு அறி­வித்­துள்­ளது.