சிறிய, நடுத்தர நிறுவனங்கள், லாபநோக்கற்ற அமைப்புகளுக்கு வாடகைக் கழிவு

சிறிய, நடுத்தர நிறுவனங்கள், லாபநோக்கற்ற அமைப்புகளுக்கு வாடகைக் கழிவு

2 mins read
afd565e4-3588-4f7b-9fd6-77e0e6db51bc
மே 14 ஆம் தேதிக்கும் மே 29 ஆம் தேதிக்கும் இடையில் ஒப்பந்தத்துக்கு உட்பட்ட ஆகப்புதிய மொத்த வாடகை அடிப்படையில் வாடகைக் கழிவுபணப் பட்டுவாடா இடம்பெறும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூர் சமூ­கத்­தில் கொவிட்-19 பர­வ­லைத் தடுக்­கும் வகை­யில் கட்டுப்­பா­டு­கள் அதி­க­மாகியுள்ளன.

அதனால் சில்­லறை விற்­ப­னைக் கடை­கள், உடற்­ப­யிற்­சிக் கூடங்கள், உண­வகங்­கள், திரை­ய­ரங்­கு­கள், துணைப்பாட நிலை­யங்­கள், பாலர்­பள்­ளி­கள், மருந்­த­கங்­கள் ஆகி­ய­வற்­றுக்­குப் பாதிப்பு அதி­க­மாகி இருக்­கிறது.

இந்­தச் சூழ­லில் இவற்­றுக்கு ஆகும் வாட­கைச் செலவை ஓரளவுக்கு ஈடு­செய்­யும் வகை­யில் மேலும் உத­வி­கள் கிடைக்கும்.

தகு­தி­பெ­றும் வர்த்­தக இடங்­களில் செயல்­படும் சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்­கும் லாப நோக்­கற்ற அமைப்­பு­க­ளுக்­கும் வாடகை நிவா­ர­ணம் கிடைக்­கும்.

இத்­த­கைய நிறு­வ­னங்­கள், அமைப்­பு­க­ளின் வரு­டாந்­திர வரு­மா­னம் $100 மில்­லி­ய­னுக்­கும் குறை­வாக இருக்க வேண்­டும். இந்த விவ­ரங்­களை நிதி அமைச்சு நேற்று அறி­வித்­தது.

கொவிட்-19 கடும் கட்­டுப்­பாடு கள் கார­ண­மாக ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்­பு­களை நிறு­வ­னங்­களும் ஊழி­யர்­களும் சமா­ளிக்க உத­வும் வகை­யில் $800 மில்­லி­யன் ஆத­ர­வுச் செயல்­திட்­ட­ம் அ­றி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் அறி­வித்த அந்­தத் திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக இந்த வாடகை நிவா­ர­ணம் கிடைக்­கும்.

அர­சாங்­கத்­துக்­குச் சொந்த­மான கட்­ட­டங்­களில் தொழில் நடத்­தும் குத்­த­கை­தா­ரர்­க­ளுக்கு ஒரு மாத வாடகைக் கழிவு உண்டு. இப்­படி கிடைக்­கும் கழிவுக்குத் தகுதி பெறும் உள் குத்­த­கை­தா­ரர்­கள் யாரா­வது இருந்­தால் அவர்­கள் பயன் அடை­யும்­படி குத்­தகை­தாரர்­கள் உதவ வேண்டி இருக்­கும் என்று அமைச்சு தெரி­வித்­தது.

தனி­யா­ருக்­குச் சொந்­த­மான வர்த்­த­கக் கட்­ட­டங்­களில் தொழில் நடத்­து­வோ­ருக்கு, ஒரு புதிய வாடகை ஆத­ர­வுத் தட்­டத்­தின் கீழ், பாதி மாத வாட­கைக் கழிவை சிங்­கப்­பூர் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யம் நேர­டி­யாக குத்­த­கை­தா­ரர்களுக்­குக் கொடுக்­கும் என்று அமைச்­சர் கூறி­னார்.

தங்­கள் கட்­ட­டங்­களில் வாட­கைக்­குத்­தொ­ழில் நடத்­து­வோ­ருக்கு மீதி மாத வாட­கைக் கழிவைக் கொடுத்து உத­வும்­படி கட்­டட உரிமை­யா­ளர்­களை அமைச்­சர் கேட்­டுக்­கொண்­டார்.

இந்­தப் பட்­டு­வாடா ஆகஸ்ட் நடுப்­ப­கு­தி­யில் இருந்து கிடைக்கும்.

மே 14 ஆம் தேதிக்­கும் மே 29 ஆம் தேதிக்­கும் இடை­யில் ஒப்­பந்­தப்­ப­டி­யான ஆகப்­பு­திய மொத்த வாடகை அடிப்­ப­டை­யில் இது கணக்­கி­டப்­படும்.

இது ஒரு­பு­றம் இருக்க, சொந்த கட்­ட­டத்­தில் சிறிய, நடுத்­தர நிறு­வ­ன­மாக அல்­லது லாப­நோக்­கற்ற அமைப்­பா­கச் செயல்­ப­டு­வோ­ருக்­கும் ரொக்க உதவி உண்டு. இது அவர்­கள் சொத்­தின் இந்த ஆண்டு மதிப்பு அடிப்­ப­டை­யில் இருக்­கும்.