நிதி அமைச்சர்: கொவிட்-19 நீடிக்கும் என நினைத்து திட்டங்கள்

நிதி அமைச்சர்: கொவிட்-19 நீடிக்கும் என நினைத்து திட்டங்கள்

1 mins read
72853d44-93cc-4b6b-a624-09fb3622c28f
-

கொவிட்-19 தொற்று இங்கு ஒரு தொற்றுநோயா­கத் தொட­ரக்­கூ­டிய வாய்ப்பு இருப்­ப­தைக் கருத்­தில் கொண்டு அதற்கு ஏற்ப சிங்­கப்­பூர் திட்­ட­மி­டத் தொடங்கி இருக்­கிறது என்று நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் தெரி­வித்­தார்.

அதா­வது, சிங்­கப்­பூ­ரர்­கள் அப்­போ­தைக்கு அப்­போது நோய்த்­தடுப்பு ஆற்­றலை அதி­க­ரித்­துக் கொள்ள வேண்டி இருக்­கும். பயம் குறை­யும் வகை­யில் அந்த நோய்க்கு வரும் மாதங்­களில் இன்­னும் சிறந்த சிகிச்சை கண்­டு­பி­டிக்­கப்­படும் வாய்ப்­பும் இருக்­கிறது என்று நேற்று மெய்­நி­கர் செய்தியாளர் கூட்­டத்­தில் அமைச்­சர் தெரி­வித்­தார்.

அப்­போ­தும்­கூட அடிப்­படை முன்­னெச்­ச­ரிக்கை நட­வடிக்கை­களை சிங்­கப்­பூர் எடுக்க வேண்­டிய தேவை இருக்­கும் என்று கூறிய திரு வோங், கிருமி தொற்­று­வ­தைக் குறைக்­கும் வகை­யில் கட்டடங்களில் காற்­றோட்ட வச­தி­களை எடுத்­துக் காட்­டா­கக் குறிப்­பிட்­டார்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்றை, இங்கு நிலை பெற்­றுவிட்ட ஒரு தொற்­று­நோ­யாக எப்­போது கருது வது என்று கேட்­ட­தற்கு அதை தன்­னால் சொல்ல இய­ல­வில்லை என்று அமைச்­சர் கூறி­னார்.

இருந்­தா­லும் உல­கம் முழு­வ­தை­யும சேர்ந்த அறி­வி­யல் வல்­லு­நர்­கள் தெரி­வித்து வரு­வதை கவனத்­தில் கொண்டு சிங்கப்பூர் பல­வற்­றுக்­கும் திட்­ட­மிட்­டு­ வ­ரு­வ­தாக அமைச்­சர் தெரி­வித்­தார்.

கொவிட்-19 கிரு­மியை அறவே துடைத்து ஒழிப்­பது சாத்­தி­ய­மா­ன­தல்ல. அந்­தக் கிருமி ஒரு­போ­தும் ஒழி­யாது. அதோடு வாழ நாம் கற்­றுக்­கொள்­ள­வேண்டி இருக்­கும் என்ற முடிவை உலக வல்­லு­நர்கள் நெருங்­கு­கி­றார்­கள் என்­றாரவர்.