சமூகத்தில் புதிதாக 15 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று

சமூகத்தில் புதிதாக 15 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று

1 mins read
372d9837-ad72-45d4-9905-73c93bfb39c6
-

சிங்­கப்­பூ­ரில் நேற்று நண்­ப­கல் நில­வ­ரப்­படி புதி­தாக 30 பேருக்கு கொவிட்-19 தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. அவர்­களில் 15 பேர் சமூ­கத்­தொற்­றுக்கு ஆளா­ன­வர்­கள்.

வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­களில் யாருக்­கும் புதி­தாக தொற்று இல்லை. சமூ­கத்­தொற்று ஏற்­பட்­ட­வர்­களில் 15 பேர் கொவிட்-19 நோயா­ளி­க­ளு­டன் தொடர்­பில் இருந்­த­வர்­கள்.

அவர்­களில் எட்­டுப் ­பேர் தனித்து வைக்­கப்­பட்டு இருந்­த­வர்­கள்.

நால்­வ­ருக்­குத் தொடர்­பில்லா தொற்று ஏற்­பட்­டது.

வெளி­நா­டு­களில் இருந்து வந்த 15 பேருக்­குத் தொற்று இருந்­தது தெரி­ய­வந்­ததை அடுத்து அவர்­கள் அனை­வ­ருக்­கும் தனிமை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­ட­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

இங்கு வந்­த­வர்­களில் எட்டுப் பேர் சிங்­கப்­பூர் குடி­மக்­கள் அல்­லது நிரந்­த­ர­வா­சி­கள்.

சுகா­தார அமைச்சு வியா­ழக்­கி­ழ­மை­யன்று 14 பேருக்­குச் சமூ­கத்­தொற்று ஏற்­பட்­ட­தாக தெரி­வித்­தது. அவர்­களில் நான்கு துப்­பு­ரவு ஊழி­யர்­களும் GovTech என்ற அமைப்­பைச் சேர்ந்த ஊழி­ய­ரான மாது ஒரு­வ­ரும் அடங்­கு­வர்.

தொடர்ப்பு இல்­லாத தொற்று ஏற்­பட்டு இருந்த மூவ­ரில் இவர் ஒரு­வர். மற்­றொ­ரு­வர் 67 வயது ஆட­வர். மூன்றாமவர் 42 வயது பங்­ளா­தேஷ் ஊழி­யர்.

இத­னி­டையே, நேப்­பா­ளத்­தில் இருந்து ஏப்­ரல் 25 ஆம்­ தேதி சிங்­கப்­பூர் வந்த தனக்கு சாங்கி விமான நிலை­யத்­தில் தொற்று ஏற்­பட்டு இருக்­க­லாம் என்று திரு­வாட்டி சோனால் வாடே, 32, என்ற கொவிட்-19 நோயாளி கூறி­ய­தற்கு ஆதா­ரம் எது­வும் இல்லை என்­பது புலன்­வி­சா­ர­ணை­கள் மூலம் தெரிய வந்­துள்­ள­தாக சுகா­தார அமைச்சு கூறி­ய­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­தது.