இலங்கைத் தலைநகர்
கொழும்புக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் சிங்கப்பூர் கொள்கலன் கப்பல் தீப்பிடித்து எரிவதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க இலங்கைக் கடற்
படைக்கு இந்திய கப்பல்களும் உதவி செய்து வருகின்றன.
எக்ஸ்-பிரஸ் பர்ல் எனும் அந்தக் கப்பல் பாதியாக உடைந்து எண்ணெய்க் கசிவு ஏற்படும்
அபாயம் இருப்பதாக அஞ்சப்படுகிறது. கப்பலில் இருந்த 25 சிப்பந்திகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக கப்பலை இயக்கும் நிறுவனம் தெரிவித்தது.

