போலி சட்ட நிறுவனங்கள், வழக்கறிஞர் ஆள்மாறாட்ட மோசடிகள் கூடின வழக்கறிஞர் சங்கம் எச்சரிக்கை

2 mins read
436a84be-1ad1-469d-bbaf-8bd65f218a6e
-

போலி சட்ட நிறு­வ­னங்­களை அமைத்து, வழக்­க­றி­ஞர்­கள் போல ஆள்­மா­றாட்­டம் செய்­வது, சட்ட நிறு­வ­னங்­க­ளின் மின்­னஞ்­சல் முக­வ­ரி­க­ளைப் போல் உள்ள போலி முக­வ­ரி­க­ளி­லி­ருந்து மின்­னஞ்­சல் அனுப்­பு­வது போன்­ற­வற்­றில் ஈடு­பட்டு பொது­மக்­க­ளி­டம் இருந்து பணத்தை ஏமாற்­றும் மோச­டி­கள் அதி­க­ரித்­துள்­ளன. சிங்­கப்­பூர் வழக்­க­றி­ஞர் சங்­கம் அவ்­வாறு எச்­ச­ரித்­தி­ருக்­கிறது.

அதி­க­மான சிங்­கப்­பூ­ரர்­கள் இணைய பரி­வர்த்­த­னைக்கு மாறி­யுள்ள நிலை­யில், மோச­டி­கள் அதிக சாதூர்யத்துடன் நடை­பெ­று­வ­தாக சிங்­கப்­பூர் வழக்­க­றி­ஞர் சங்­கத் தலை­வர் திரு கிரெ­கரி விஜ­யேந்­தி­ரன் தெரி­வித்­தார்.

இணை­யம் வழி­யாக நேற்று நடந்த செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் அது­பற்றி அவர் விவ­ரித்­தார்.

கடந்த மூன்று ஆண்­டு­களில் வழக்­க­றி­ஞர்­கள் அல்­லது சட்ட நிறு­வ­னங்­கள் தொடர்­பான ஏழு மோச­டிச் சம்­ப­வங்­கள் நடந்­துள்­ள­தாக திரு கிரெ­கரி சொன்­னார்.

அத்­த­கைய ஒரு சம்­ப­வத்­தில் மோச­டிக்­கா­ரர்­கள் 'கோ கெங்' சட்ட நிறு­வ­னத்தை அமைத்து, அதன் இணை­யப்­பக்­கத்­தில் போலி வழக்­க­றி­ஞர்­க­ளின் விவ­ரக் குறிப்­பு­க­ளைப் பதி­வேற்­றி­னர். அவற்­றுக்கு உண்­மை­யான வழக்­க­றி­ஞர்­க­ளின் புகைப் படங்­கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டன. மேலும், உண்­மை­யான சட்ட நிறு ­வ­னங்­க­ளின் இணை­யத்­த­ளங்­களில் இடம்­பெற்ற வாடிக்­கை­யா­ளர் விமர்­ச­னங்­கள் அதில் பயன்­ப­டுத்­தப்­பட்­டன.

சட்ட நிறு­வ­னம் வழக்கை எடுக்­கும் முன்­ன­தாக, கட்­ட­ணத்­தைச் செலுத்­து­மாறு வாடிக்­கை­க­யா­ளர்­ க­ளி­டம் கூறப்­பட்­டது. இணை­யத் ­த­ளத்தை முடக்­கும்­படி அதற்­கான இணை­யக் கட்­ட­மைப்பை வழங்­கும் நிறு­வ­னத்­துக்கு வழக்­க­றி­ஞர் சங்­கத்­தின் சார்­பில் அறிக்கை அனுப்­பப் பட்­டி­ருக்­கிறது. இணை­யக் கட்­ட­மைப்பை வழங்­கும் நிறு­வ­னம் அமெ­ரிக்­கா­வில் செயல்­பட்டு வரு­கிறது. அறிக்கை கிடைத்­தது என்று அந்­நி­று­வ­னம் கூறி­யுள்­ள­போ­தும், போலி இணை­யத்­த­ளம் இன்­னும் செயல்­பட்டு வரு­கிறது.

மற்­றொரு மோச­டி­யில், சிங்­கப்­பூர் சட்ட நிறு­வ­னத்­தின் வெளி­நாட்­டுக் கிளை போன்ற தோற்றத்தில் இணை­யத்­த­ளத்­தைத் தொடங்கி மோடி செய்­யப்­பட்­டது.

இன்­னொரு சம்­ப­வத்­தில், சட்ட நிறு­வ­னத்­துக்கு, அதன் வாடிக்­கை­யா­ளர் நிறு­வ­னத்­தின் முக­வரி போன்ற போலி முக­வ­ரி­யி­லி­ருந்து மின்­னஞ்­சல் அனுப்­பப்­பட்­டது. தனக்­கு­ரிய அட­குக் கடன் கட்­ட­ணத்தை உள்­ளூர் வங்­கிக்கு பதில் வெளி­நாட்டு வங்­கியில் செலுத்தும்படி அதில் கூறப்­பட்­டது.

2019இல் நடந்த ஒரு மோச­டி­யில் மட்­டும் பண இழப்பு ஏற்­பட்­ட­தாக திரு கிரெ­கரி கூறி­னார்.

சட்ட சேவை­கள் கட்­டுப்­பாட்டு ஆணை­யத்­தின் இணை­யத்­த­ளத்­தில் வழக்­க­றி­ஞர்­கள், சட்ட நிறு­வ­னங்­களின் அதி­கா­ர­பூர்வ பொது விவ­ரப்பட்­டி­யல் உள்­ளது. மின்­னஞ்­சல் விவ­ரங்­களை அதில் சரி­பார்க்­கும்­படி திரு கிரெ­கரி பொது­மக்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டார்.

கட்­ட­ணம் கேட்டு மின்­னஞ்சல் பெற்­றால், வழக்­க­றி­ஞர்­க­ளி­டம் முத­லில் கேட்டுவிட்டு கட்­ட­ணம் செலுத்­தும்­ப­டி­யும் அவர் கூறினார்.