'அத்தியாவசிய ஊழியர்களுக்கான படம் மாற்றப்பட்டது பண்பற்ற செயல்'

'அத்தியாவசிய ஊழியர்களுக்கான படம் மாற்றப்பட்டது பண்பற்ற செயல்'

1 mins read
5a5593a7-b7e7-4961-8e8b-d380dd4c0514
'உண்ணும் பகுதி' என்று குறிக்கும் பதாகை வாசகம் 'உயிரை விடும் பகுதி' என்று மாற்றப்பட்டுள்ள படம் இணையத்தில் உலாவி வருகிறது. படம்: பியோ கி்ரெசண்ட் குடியிருப்பாளர் கட்டமைப்பு/ஃபேஸ்புக் -

டாக்சி ஓட்­டு­நர்­களும் பொருட்­களை விநி­யோ­கம் செய்­ப­வர்­களும் சாப்­பி­டு­வ­தற்­கான பகு­தி­யைக் காட்­டும் படத்­தில், பதாகை வாச­கங்­கள் மாற்­றப்­பட்­டதை பண்­பற்ற செயல் என்று தொடர்பு தக­வல் அமைச்­சர் திரு­மதி ஜோச­ஃபின் டியோ கண்­டித்­தி­ருக்­கி­றார். படத்­தில் உள்ள 'உண்­ணும் இடம்' எனும் வாச­கம் 'உயிரை விடும் இடம்' என்று கணி­ணி­யில் மாற்­றப்­பட்டு, இணை­யத்­தில் பரப்­பப்­பட்டு வரு­கிறது.

புளோக் 48ஏ லோவர் டெல்டா சாலை­யில் உள்ள ஒரு கூடா­ரத்­தில் அத்­தி­யா­வ­சிய ஊழி­யர்­கள் சாப்­பி­டு­வ­தற்­காக இடம் ஒதுக்­கப்­பட்­டது. ஜாலான் புசார் நகர மன்­ற­மும் பியோ கிரெ­சண்ட் குடி­யி­ருப்­பா­ளர் கட்­ட­மைப்­பும் சேர்ந்து அதனை அமைத்­தன.

கிரேத்­தா ஆயர் - கிம் செங் வட்­டார நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான திரு­மதி டியோ ஃபேஸ்புக்­கில் சம்­ப­வம் பற்றி பதி­விட்­டார். அந்த வட்­டா­ரத்­தில்தான் அந்த உண்­ணும் கூடாரம் உள்ளது.

படத்­தின் வாச­கங்­கள் மாற்­றப்­பட்­டதை, உணர்­வு­க­ளுக்கு மதிப்­ப­ளிக்­காத செயல் என்று திரு­மதி டியோ வரு­ணித்­தார்.

தங்­கள் நல்­லெண்­ணத்­தைப் பொ ருட்படுத்தாமல் பொய்­க­ளைப் பரப்­பு­வோர் இணை­யத்­தில் இருப்­பது தங்­க­ளுக்கு ஏமாற்­றம் தரு­வ­தாக பியோ கிரெ­சண்ட் குடி­யி­ருப்­பா­ளர் கட்­ட­மைப்பு அதன் ஃபேஸ்புக் பதி­வில் குறிப்­பிட்­டது. மாற்­றப்­பட்ட படத்­தைப் புறக்­க­ணிக்­கும்­படி அது பொது­மக்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டது.

உண­வ­கங்­க­ளி­லும் உண­வங்­கா­டி­க­ளி­லும் அமர்ந்து சாப்­பிட முடி­யாது என்­பது வரும் ஜூன் 13ஆம் தேதி வரை­யி­லான கொவிட் கட்­டுப்­பா­டு­களில் ஒன்று. டாக்சி ஓட்­டு­நர்­களும் பொருள் விநி­யோ­கிக்­கும் ஓட்­டு­நர்­களும் அமர்ந்து சாப்­பி­ட­வும் ஓய்வு எடுக்­க­வும் தீவு முழு­வ­தும் இது­போன்ற இடங்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.