உடன் தங்கியவரை ஊன்றுகோலால் அடித்த 93 வயது முதியவருக்கு 6 மாதம் சிறை

உடன் தங்கியவரை ஊன்றுகோலால் அடித்த 93 வயது முதியவருக்கு 6 மாதம் சிறை

2 mins read
5e9e4003-16f1-4bb0-8eb1-b3e1b63e4574
-

புக்­கிட் மேரா­வில் உள்ள ஒரு காப்­ப­கத்­தில் தன்­னு­டன் ஒரே அறை­யில் தங்­கி­யி­ருந்­த­வரை நடக்­கும் ஊன்­று­கோ­லைக் கொண்டு அடித்த 93 வயது முதி­ய­வ­ருக்கு ஆறு மாதம் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

தங்­கள் அறை­யில் மின்­ விளக்கை அணைப்­பது பற்றி 93 வயது சிம் ஹுவா­வுக்­கும் 85 வயது ஓ சாய் தியாம் என்பவருக்கும் இடையே தக­ராறு ஏற்­பட்­ட­தைத் தொடர்ந்து சிம், திரு ஓவை கம்­பால் அடித்­தார்.

அதன் தொடர்­பில் வேண்­டும் என்றே காயம் ஏற்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டை சிம் ஒப்­புக்­கொண்­டார்.

மின்­வி­ளக்கு பற்­றிய தக­ராற்­றால், தன்­னு­டன் தங்­கி­யி­ருப்­ப­வரை சிம் அடித்த இரண்­டா­வது சம்­ப­வம் இது. சிம்­முக்கு கல்­லீ­ரல் புற்­று­நோய் உள்­ளது. இருப்­பி­னும், மருத்­துவ அறிக்­கைக் காத்­தி­ருக்க விரும்பாமல், உடனடியாக தண்­டனை விதிக்­கப்­பட வேண்­டும் என்று சிம் கேட்டுக்கொண்டதாக அர­சாங்க வழக்­கு­ரை­ஞர் நேற்று நீதி­மன்­றத்­தில் கூறி­னார்.

கடந்த அக்­டோ­பர் 17ஆம் தேதி நடந்த சம்­ப­வத்­தில் திரு ஓ அறை­யில் தூங்­கிக்­கொண்­டி­ருந்­தார்.

அப்போது, சிம் மின்­வி­ளக்­கு­களை போட்­டார். தான் தூங்­க­வேண்­டும் என்­று­கூறி மின்­வி­ளக்கை அணைத்­தார் ஓ.

ஆனால் சிம் மீண்­டும் விளக்கை அழுத்­தி­னார். தமது படுக்­­கை­யில் இருந்­த­வாறு அதற்கு ஆட்­சே­பித்த திரு ஓவை, சிம் பல­முறை ஊன்­று­கோ­லால் அடித்­தார். திரு ஓ தரை­யில் விழுந்­த­போ­தும் அடிப்பதை நிறுத்தவில்லை.

திரு ஓவை சிம் குறைந்­தது 10 முறை கம்­பால் அடித்­த­தாக அர­சாங்க வழக்­க­றி­ஞர் கூறி­னார். அத்­தாக்­கு­த­லால் திரு ஓவின் இடது கையில் எலும்பு முறிந்­த­தோடு, இடது கணுக்காலில் வீக்­கம் ஏற்­பட்­டது.

திரு ஓ மருத்­து­வ ம­னை­யில் 27 நாட்­கள் தங்கியிருந்தார்.