போலிஸ் அதிகாரி மீது மலம் வீசியவர்

போலிஸ் அதிகாரி மீது மலம் வீசியவர்

1 mins read
e7b3e87a-b0c1-4beb-85fd-7fbfb6126588
-

லாரி­யி­லி­ருந்து திரு­டிய குற்­றத்­துக்­காக போலிஸ் காவ­லில் இருந்த நபர், மலம் கழித்து அதனை போலிஸ் துணை அதி­காரி மீது வீசி­னார். பொதுத் துறை அதி­காரி மீது வன்­மு­றை­யைப் பயன்­ப­டுத்­தி­யது உள்­ளிட்ட ஆறு குற்­றச்­சாட்­டு­களை சுலை­மான் அப்­துல் மஜித் மரைக்­கார், 34, நேற்று நீதி­மன்­றத்­தில் ஒப்­புக்­கொண்­டார்.

திருட்­டுக் குற்­றங்­க­ளுக்­காக சிறைக்கு பல முறை சென்ற சுலை­மான், கடந்­தாண்டு அக்­டோ­ப­ரில் லாரி ஒன்­றில் புகுந்து கைப்­பே­சி­கள் உள்­ளிட்­ட பொருட்களை திரு­டியதால் பிடிபட்­டார். உட்­லண்ட்ஸ் போலிஸ் வட்­டார தலை­மை­ய­கத்­தில் காவலில் வைக்­கப்­பட்­டி­ருந்த சுலை­மான் தண்­ணீர் குடிப்­ப­தற்­காக தாளால் செய்த குவளை தரப்­பட்­டது.

சுலைமான் அதில் மலம் கழித்து, 24 வயது போலிஸ் துணை அதிகாரி மீது வீசினார். ­­அதிகாரி மேல் அதிகாரியிடம் அதைப் பற்றி புகார் அளித்தார்.