செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
a3280615-9e84-43f4-b387-4380a8f26711
-

காலில் மிதித்த 8 வயது சிறுமியை அறைந்ததை ஒப்புக்கொண்ட மாது

எம்ஆர்டி ரயிலில் தன் காலில் மிதித்த சிறுமியை அறைந்ததன் தொடர்பில் வேண்டும் என்றே காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டை மாது ஒருவர் ஒப்புக்கொண்டார். சம்பவம் நடந்தபோது சிறுமிக்கு வயது எட்டு. பாதிக்கப்பட்ட சிறுமி 14 வயதுக்கு உட்பட்டவர் என்பதால், கானி சோ கூடுதல் தண்டனையை எதிர்நோக்குகிறார்.

கடந்தாண்டு ஜூலை 15ஆம் தேதி, சுவா சூ காங் ரயில் நிலையத்தில் பிற்பகல் 1.47 மண அளவில் தன் தாயாருடன் ரயிலில் ஏறிய சிறுமி, சோவின் காலில் தவறுதலாக மிதித்துவிட்டார். அதற்காக சோவிடம் சிறுமி மன்னிப்புக் கேட்டார். ஆனால் தொலைபேசியில் சத்தமாகப் பேசிக்காண்டிருந்த சோவுக்கு சிறுமியின் மன்னிப்பு கேட்கவில்லை.

பின்னர் சிறுமி மன்னிப்புக் கோரவில்லை என்று அவருடைய தாயாருடன் சோ வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சிறுமி மன்னிப்பு கேட்டுவிட்டதாக அவர் தாயார் கூறினார்.

ரயில் யூ டீ ரயில் நிலையத்தை அடைந்ததும் சிறுமியும் அவர் தாயாரும் இறங்க முற்பட்டபோது, சோ சிறுமியை அறைந்தார். சிறுமியை அவரது தாயார் மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் சென்றபோது, அவரது கன்னத்தில் காயம் ஏற்பட்டிருந்தது. சோவுக்கு குறைந்தது 5,000 வெள்ளி அபராதம் விதிக்கும்படி அரசாங்க வழக்கறிஞர் நீதிமன்றத்தை நேற்று கேட்டுக்கொண்டார்.

சட்டவிரோதமாக அழகுச்சிகிச்சை செய்த மாதுக்கு சிறை, அபராதம்

மருத்துவ நிபுணர்கள் செய்க்குயும் அழகுச் சிகிச்சைகளை சட்டவிரோதமாக செய்த மாதுக்கு 10 வாரம் சிறைத்தண்டனையும் 5,500 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தைச் செலுத்த முடியாவிட்டால் அவர் கூடுதலாக 22 நாட்கள் சிறையில் இருக்க வேண்டியிருக்கும்.

டான் ஷூ மின், 26, மருத்துவ உரிமமும் அதற்கான சான்றிதழ் இல்லாமலும் சிசிச்சையை மேற்கொண்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். அத்துடன், மலேசியரான டான் உரிமம் இல்லாமல் சிங்கப்பூருக்குள் சுகாதாரப் பொருட்களை இறக்குமதி செய்தது, நச்சுப் பொருளை இறக்குமதி செய்தது ஆகியவற்றின் தொடர்பில் மேலும் நான்கு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். நேற்று நீதிமன்றத்தில் தண்டனை விதிப்பின்போது கூடுதலாக 10 குற்றச்சாட்டுகள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

மூக்கின் எலும்புப் பகுதியில் நூலைச் செலுத்தி, மூக்கின் அழகைக் கூட்டும் சிகிச்சையை ஹோட்டல் அறையில் ஒரு பெண்ணுக்கு மேற்ச்கொண்டார். அவருக்கு ஆண்ட்டிபயோட்டிக் மருந்துகளை வழங்கினார்.