முரசொலி
கொவிட்-19 சென்ற ஆண்டு முதல் உலகை மிரட்டி வருகிறது. இதில் நாம் வசிக்கும் தென் கிழக்கு ஆசிவும் தப்ப இயலவில்லை. என்றாலும்கூட படுமோசமான பாதிப்பு இல்லாமல் சென்ற ஆண்டில் இந்த வட்டாரம் எப்படியோ தப்பிவிட்டது.
ழுழுமைன மீட்சி இல்லை என்றாலும் நம்பிக்கையுடன் தென்கிழக்கு ஆசியா தலை எடுக்கத் தொடங்கியது. ஆனால் அதற்குள் அடுத்த மிரட்டல் வந்துவிட்டது.
இரண்டாவது கொரோனா அலையை ஏற்படுத்தி இருக்கும் உருமாறிய கிருமி, அசல் கிருமியைவிட பல வழிகளிலும் மோசமானதாகத் தெரிகிறது. முதல் அலையைவிட அதிக வேகமாகப் பரவுகிறது, பாதிக்கிறது, கொல்கிறது.
அதுவும் புதிய பி1617 என்ற வகைக் கிருமி முதலில் தோன்றிய இடம் நமக்கு அருகில் இருக்கும் தெற்கு ஆசிவாக இருப்பது இன்னும் அச்சத்தைக் கிளப்பி விடுவதாக இருக்கிறது.
இந்த வட்டாரத்தைச் சேர்ந்த பல நாடுகளிலும் சுகாதாரப் பராமரிப்பு வளங்களுக்கான சுமைகள், தேவைகள் கூடுகின்றன. பொருளியல் மறுபடியும் பின்நோக்கிச் சரியக்கூடிய ஆபத்து வரக்கூடும் என்ற அச்ச அறிகுறிகள் உணரப்படுகின்றன.
தெற்கு ஆசிவை இப்போது பதம் பார்க்கும் உருமாறிய கிருமி, அதற்கு எதிரான போராட்டத்தை இதுவரை இல்லாத அளவுக்கு வலுவாக மேல் எடுத்துச் செல்லவேண்டிய ஒரு கட்டாயத்தை இந்த வட்டாரத்திற்கு ஏற்பட்டு இருக்கிறது.
தெற்கு ஆசிய நாடுகளிள் நிலவரங்கள் படுமோசமாக இருக்கின்றன. மிகவும் வேகமாகப் பரவக்கூடிய பி1617 உருமாறிய கிருமி, முதலில் இந்தி வில் தலைகாட்டியது. அது பரவுகின்ற, பாதிக்கின்ற வேகத்திற்கு அந்த நாடுகளின் வளங்கள் ஈடுகொடுக்க முடியவிலைல்லை.
அடிப்படை சுகாதாரப் பராமரிப்பு வசதிகள் போதவில்லை. மருத்துவமனைகளில் இடமில்லை. உயிர் வாயு இல்லை, மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க இடமில்லாமல் கண்முன்னே பலரும் மரண மடைவதைக் காண முடிகிறது. இடுகாடுகளில் கூட இடமில்லை. ஆனாலும் அன்றாட தொற்று பாதிப்பு உச்சத்தைத் தொடுகிறது.
தெற்கு ஆசிவின் இந்த நிலவரம் தென்கிழக்கு ஆசிவில் வசிக்கும் நமக்கு ஒரு பாடம், ஓர் எச்சரிக்கை. இந்திவில் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய வீரியமிக்க கொரோனா கிருமி, இதர வகை கிருமிகளோடு சேர்ந்து இந்த வட்டார நாடுகளுக்குப் பரவி இருக்கிறது.
கம்போடி, இந்தோனீசி, மலேசி, பிலிப்பின்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்னாம் நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடி, லாவோஸ், மியன்மார் ஆகியவை அவ்வளவாக அடிப்படை சுகாதர வசதிகள் இல்லாத நாடுகள்.
இதன் காரணமாக அதிக தொற்று ஏற்பட்டு பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலைக்கு அந்த நாடுகள் தள்ளப்பட்டுவிடும் என்று அபாயச்சங்கு ஊதப்படுகிறது.
கம்போடிவில் மருத்துவமனைகளில் இடமில்லை. ஆகைல் நோளிகளுக்கு அவர்களின் வீட்டிலேயே சிகிச்சை அளிக்க ஆயத்தமாகும்படி அந்த நாட்டு சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
சென்ற ஆண்டைவிட மோசமாக மிரட்டி வரும் இப்போதைய தொற்றை ஒடுக்குவதில் ஆசின் எனப்படும் 10 நாடுகளைக் கொண்ட இந்த வட்டார அமைப்பிற்கு மிக முக்கியபணி உள்ளது.
ஆசின் நாடுகள், சென்ற ஆண்டு தொற்று இங்கு பரவியபோது சுகாதாரத்துறை, வெளியுறவு விவகாரங்கள் ஆகியவற்றில் மட்டுமின்றி, கல்வி, வேளாண்மை, தொழிலாளர், சமூக நல்வாழ்வு, வர்த்தகம், போக்குவரத்து போன்ற பாதிக்கப்பட்ட இதர துறைகளிலும் உடனுக்குடன் விரைந்து பல்வேறு நடவடிக்கைளை எடுத்தன.
வர்த்தகம், முதலீடுகளுக்கு அந்த நாடுகள் எல்லைகளை அடைக்கவில்லை. உணவு, மருந்து மருத்துவப் பொருட்கள் போன்ற அவசியமான பொருட்கள் எல்லாம் தடையின்றி எல்லை கடந்து சென்றுவர பல்வேறு ஏற்பாடுகளை அவை செய்து இருந்தன. கொரோனா பிடியில் இருந்து மீண்டு வருவதற்கு என்றே 'ஆசின் பரந்த மீட்சி ஏற்பாடு' என்ற ஓர் உடன்பாடே ஏற்பட்டது.
கிருமிப் பிடியில் இருந்து இந்த வட்டாரம் ஒட்டுமொத்தமாக மீண்டு வருவதற்கான உத்தியை அது வகுத்துவருகிறது. அடிப்படைத் தேவைன சுகாதாரச் சேவைகள், தடுப்பூசி வளம் ஆகியவற்றைப் பலப்படுத்த வேண்டும் என்பதை அங்கீகரித்து அதற்கு அந்த உடன்பாடு ஆதரவு அளிக்கிறது.
இணக்கமிக்க வழிகளில் ஒட்டுமொத்தமாகச் செயல்பட்டு அதன் முலம் ஆசின் மீண்டுவர வேண்டும் என்று அந்த உடன்பாடு வலியுறுத்துகிறது. இந்த வட்டார நாடுகள் செய்ய வேண்டிய பணிகளை ஏராளமாக இருக்கின்றன. நன்கு பயிற்சி பெற்ற, பொருத்தமான, ஆற்றல்மிக்க சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் இங்கு தேவை.
அவர்கள் இப்போதைய தொற்றைச் சமாளிப்பதோடு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய இத்தகைய பேரிடர்களையும் திறம்பட கைளத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.
தெற்கு ஆசி இப்போது எதிர்நோக்கும் ஒரு நிலை தென்கிழக்கு ஆசிவிலும் ஏற்பட வழி வகுத்துவிட்டால் அதனால் இந்த வட்டாரத்திற்கு ஏற்படக்கூடிய சவால் நினைத்துப் பார்க்க இயலாத அளவுக்கு பிரம்மாண்டமானதாக இருக்கும்.
மக்களின் உடல்நலனுக்கு, அவர்களிள் நல்வாழ்வுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் கிருமித்தொற்று ஒரு நாட்டை பாதித்தால், அந்த நாடு தன் சுகாதாரப் பராமரிப்பு வளங்களைப் பயன்டுத்தி முதலில் தன் மக்களைக் காக்க வேண்டும்.
இது அந்த நாட்டின் தேசிய முக்கியத்துவம் மிக்க செயலாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நாடும் தன் குடிமக்களைப் பாதுகாக்க வேண்டியது கட்டாயமானது. இருந்தாலும் இப்போதைய சூழல் இதில் மேலும் பல பொறுப்புகளை இந்த வட்டார நாடுகளுக்குக் கட்டாயமாக்குகிறது.
கொரோனா கிருமிக்கு எல்லை கிடைது. ஒரு நாடு மட்டும் தப்பிவிட்டால் போதாது. ஆசின் நாடுகள் இதை மிக முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டும்.
இந்த வட்டாரத்தைப் பெரிய தொற்றுப் பகுதி கக் கருதி முழுமைன கண்ணோட்டத்துடன் செயல்பட்டு, ஒருமுகப்படுத்தப்பட்ட நடவடிக்கைளை அவை எடுக்க வேண்டும்.
இதுதான் கொரோனா ஒழியவும் அதற்குப் பிந்தைய காலத்தில் இந்த வட்டாரம் சேர்ந்து மேம்பட, செழிக்க, நல்வாழ்வை அனுபவிக்கவும் உதவும் வழிக இருக்கும்.

