தொற்று காலகட்டத்தில் 2020ல் உணர்வுபூர்வ, உளபூர்வ கொடுமைகள் கூடின

தொற்று காலகட்டத்தில் 2020ல் உணர்வுபூர்வ, உளபூர்வ கொடுமைகள் கூடின

2 mins read
cb59b1bb-98c7-4e14-af4e-723f52f2a8f9
-

கொவிட்-19 தொற்று காலத்­தில் உணர்­பு­வூர்­வ­மா­க­வும் மன ரீதி­யி­லும் துன்­பு­றுத்­தப்­படும் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்து இருக்­கின்­றன.

'பெரி­யோர் பாது­காப்­புச் சேவை' என்ற அமைப்பு சென்ற ஆண்­டில் புலன்­வி­சா­ரணை நடத்­திய இத்­த­கைய சம்­ப­வங்­கள் எண்­ணிக்கை 78% அதி­கமாகி உள்ளது.

இத்­த­கைய சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை 2019ல் 37 ஆக இருந்தது. அது சென்ற ஆண்­டில் 66 ஆகக் கூடி­யது என்று சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சின் புதிய புள்ளி­வி­வ­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

கொவிட்-19 கார­ண­மாக பொரு­ளி­யல் நிச்­சயமில்­லாத நிலை ஏற்­பட்டு, அதன் கார­ண­மாக இத்­தகைய சம்­ப­வங்­கள் அதி­க­மாகி இருக்­க­லாம் என்று இந்த அமைச்­சின் பேச்­சா­ளர் கூறி­ய­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­தது.

சில­ருக்கு வேலை போய் வரு­வாய் குறைந்து இருக்­க­லாம். இத­னால் குடும்­பங்­களில் பிரச்­சினை ஏற்­பட்டு இருக்­கும். குறிப்­பாக குடும்­பங்­களில் மற்­ற­வர்­க­ளைச் சார்ந்து வாழ்­ப­வர்­கள் அதி­கம் பாதிக்­கப்­ப­டக்­கூ­டும்.

குடும்­பங்­களில் அதி­க­மாகியுள்ள இத்­த­கைய உளைச்­சல்­கள் மற்றும் பிரச்­சினை­க­ளுக்­குத் தீர்வு இல்­லாத போது குடும்­பத்­தில் யாரா­வது தவறாக நடத்­தப்­ப­டக்­கூ­டிய வாய்ப்பு ஏற்­ப­ட­லாம் என்று அவர் விளக்­கி­னார்.

பெரி­யோர் பாது­காப்­புச் சேவை அமைப்­புக்கு வந்த விசா­ரணை அழைப்­பு­களும் சென்ற ஆண்­டில் அதி­க­மா­யின. 2019ல் இவற்­றின் எண்­ணிக்கை 607 ஆக இருந்­தது. சென்ற ஆண்­டில் 1,196 ஆகக் கூடி­யது. விசா­ர­ணை­க்கு வந்தவை அதி­கம் என்­றா­லும் இந்த அமைப்பு தலை­யிட்ட சம்­ப­வங்­கள் சென்ற ஆண்­டில் குறைந்­தன. இந்த எண்­ணிக்கை 2020ல் 166 ஆக இருந்­தது. 2019ல் இது 221 ஆகும்.

குடும்ப வன்­செ­யல் பற்­றிய புரிந்­து­ணர்வு பொதுமக்­க­ளி­டம் மேம்­பட்­டுள்­ளது. யாரை தொடர்பு கொள்­ள­வேண்­டும் என்­ப­தும் அவர்­க­ளுக்­குத் தெரிந்து இருக்­கிறது என்று பேச்­சா­ளர் கூறி­னார்.

குறிப்­பாக பொரு­ளி­யல் முடக்­கக் காலத்­தின்போது இந்த அமைச்­சும் அதன் பங்­கா­ளி­களும் மக்களை எட்­டக்­கூ­டிய தங்­கள் முயற்­சி­க­ளைத் தீவி­ரப்­ப­டுத்­தி­ய­தா­க­வும் அமைச்­சின் பேச்­சா­ளர் கூறினார்.