பேட்டை துப்புரவுக்கு உதவுக

பேட்டை துப்புரவுக்கு உதவுக

2 mins read
f4f40a5e-c3fb-498b-8efe-bbb03726fffa
வெளிநாட்டு ஊழியர்களில் சிலர் நாடு திரும்பிவிட்டனர். அதே வேளையில் குப்பைக் கூளங்களும் அதிகமாகிவிட்டன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஊழியர் பற்றாக்குறை சூழலில் குடியிருப்பாளர்களுக்கு எம்பி.க்கள் வலியுறுத்து

சிங்­கப்­பூ­ரில் குடி­யி­ருப்­புப் பேட்­டை­களில் துப்­பு­ரவு ஊழி­யர்­கள் பற்­றாக்­குறை ஏற்­பட்­டுள்­ளது. அதிகமான மக்கள் பெரும்­பா­லான நேரத்தை வீடு­க­ளி­லேயே கழிக்­கி­றார்­கள் என்­ப­தால் பேட்­டை­களில் சேக­ர­மாகும் குப்­பைக்கூளங்­களும் அதி­க­மாகி இருக்­கிறது.

இத்த­கைய ஒரு சூழ­லில், குடி­யி­ருப்பாளர்­கள் தங்­கள் பங்கை ஆற்றி உதவ வேண்­டும் என்று பல நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் வலி­யு­றுத்தி இருக்­கி­றார்­கள்.

வெளி­நாட்டு ஊழி­யர்­கள் பலரும் நாடு திரும்­பி­விட்­ட­னர். எல்­லை­கள் மூடப்­பட்டு இருப்­ப­தால் அவர்­க­ளுக்­குப் பதி­லாக வேறு துப்­பு­ரவு ஊழி­யர்­களை அமர்த்­து­வது சிரமமாகி இருக்­கிறது. இதே நேரத்­தில் குப்பை கூளங்­களும் அதி­கம் சேரு­கின்­றன.

தெம்­ப­னிஸ் குழுத்­தொ­குதி உறுப்­பி­னர் பே யாம் கெங், மவுண்ட்­பேட்­டன் உறுப்­பி­னர் லிம் பியோவ் சுவான், புக்­கிட் பாஞ்­சாங் உறுப்­பி­னர் லியாங் எங் ஹூவா ஆகி­யோர் நில­வ­ரங்­களை எடுத்­துக் கூறி குடி­யி­ருப்­பா­ளர்­கள் தங்­கள் பங்கை ஆற்­ற­வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்­ட­னர்.

மக்கள் கண்­ட­படி குப்­பை­களைப் போடா­மல் பொறுப்­பு­டன் நடந்­த­கொள்­ள­வேண்­டும் என்று அவர்­கள் வலி­யு­றுத்­தி­னர்.

குப்­பை­களை அப்­பு­றப்­ப­டுத்தி பேட்­டை­களைத் துப்­பு­ர­வாக வைத்­தி­ருப்­ப­தில் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் ஏதோ ஒரு வகை­யில் பொறுப்பு இருப்­பதை நாடாளுமன்ற உறுப் பினர்கள் சுட்­டி­னர்.

விர­ய­மா­கும் உண­வுப் பொருட்­களை முறை­யாக அப்­பு­றப்­ப­டுத்­த­வில்லை என்­றால் கரப்­பான் பூச்சி­கள் பெருக்­கும். எலி­களும் அதி­க­மா­கும். இத­னால் பேட்­டை­யின் துப்­பு­ரவு சீர்­கெ­டும்.

ஓர் இடத்­தில் கொசு தலை­காட்­டி­னால் அவை பல்­கிப்­பெ­ருகி டெங்கி காய்ச்­ச­லுக்­கும் வழி வகுத்து­வி­டும் என்று மவுண்ட் பேட்­டன் உறுப்­பி­னர் கூறி­னார்.

குப்­பை­கள் அதி­கம் குவி­யும் சில இடங்­கள் அடை­யா­ளம் காணப்­பட்டு இருப்­ப­தா­க­வும் கண்­கா­ணிப்பு, அம­லாக்க நட­வ­டிக்­கை­களை எடுக்­கும்­படி தேசிய சுற்­றுப்­புற ஆணை­யம் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தா­க­வும் புக்­கிட் பாஞ்­சாங் உறுப்­பி­னர் தெரி­வித்­தார்.