சமூகத்தில் புதிதாக 23 பேருக்குத் தொற்று

சமூகத்தில் புதிதாக 23 பேருக்குத் தொற்று

1 mins read
b790495a-525a-46a6-9178-a0d41b517e73
-

சிங்­கப்­பூ­ரில் நேற்று நண்­ப­கல் நில­வ­ரப்­படி புதி­தாக 33 பேருக்கு கொவிட்-19 தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. அவர்­களில் 23 பேர் சமூ­கத்­தொற்­றுக்கு ஆளா­ன­வர்­கள். சமூ­கத்­தொற்று ஏற்­பட்­ட­வர்­களில் நால்­வ­ருக்­குத் தொடர்­பில்லா தொற்று ஏற்­பட்­டது.

அவர்களில் 19 பேர் கொவிட்-19 நோயா­ளி­க­ளு­டன் தொடர்­பில் இருந்­த­வர்­கள். 13 பேர் ஏற்கெனவே தனித்து வைக்­கப்­பட்டு இருந்­த­வர்­கள்.

கண்காணிப்பு, பரிசோதனை மூலம் ஆறு பேருக்குத் தொற்று இருந்தது தெரியவந்தது.

வெளி­நா­டு­களில் இருந்து வந்த 10 பேருக்­குத் தொற்று இருந்­தது தெரி­ய­வந்­ததை அடுத்து அனை­வ­ருக்­கும் தனிமை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­ட­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

இங்கு வந்­த­வர்­களில் ஐந்து பேர் சிங்­கப்­பூர் குடி­மக்­கள் அல்லது நிரந்­த­ர­வா­சி­கள். வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­களில் யாருக்­கும் நேற்று புதி­தாக தொற்று இல்லை.

வெள்ளிக்கிழமை புதிதாக 30 பேருக்கு கொவிட்-19 தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. அவர்­களில் 15 பேர் சமூ­கத்­தொற்­றுக்கு ஆளா­ன­வர்­கள் என்று அமைச்சு தெரிவித்து இருந்தது. வெள்ளிக் கிழமையும் வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­விடு­தி­களில் யாருக்­கும் புதி­தாக தொற்று இல்லை.

புதி­தாக கெரோனா கிருமி தொற்­றியவர்­க­ளை­யும் சேர்த்து இங்கு பாதிக்­கப்­பட்டவர்­களின் மொத்த எண்­ணிக்கை 62,003 ஆகி­யது. கொவிட்-19 கார­ண­மாக மொத்­தம் 32 பேர் மர­ண­மடைந்து உள்­ள­னர்.