சாலைகளில் பாதுகாப்பான முறையில் வாகனம் ஓட்டுபவர்களாக அல்லது பணிவன்புடன் நடந்துகொள்பவர்களாக போக்குவரத்து போலிசாரால் அடையாளம் காணப்படும் ஓட்டுநர்களுக்கு கொவிட்-19 பராமரிப்புப் பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாத காலத்துக்கு நடத்தப்படும் சாலைப் பாதுகாப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்த கொவிட்-19 பராமரிப்புப் பொருட்கள் வழங்கப்படும்.
'அனைவருக்குமான சாலைப் பாதுகாப்பு' எனும் கருப்பொருள் கொண்ட இந்த இயக்கம் ஜூன் 27ஆம் தேதி முடிவடையும்.
பாதுகாப்பான முறையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டு
பிடிக்கும் திட்டத்துடன் சிவப்புப் போக்குவரத்து விளக்குகளில் நிறுத்தாமல் செல்வது, வேக வரம்பை மீறி வாகனம் ஓட்டுவது ஆகியவற்றுக்கு எதிரான விழிப்
புணர்வை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும்.
இந்த இயக்கத்தை சிங்கப்பூர் சாலைப் பாதுகாப்பு மன்றமும்
போக்குரவத்து போலிஸ் படையும் நிலப் போக்குவரத்து ஆணையம், கல்வி அமைச்சு, மக்கள் கழகம், சிங்கப்பூர் வாகனச் சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் கடந்த
வெள்ளிக்கிழமையன்று தொடங்கிவைத்தன. சாலைப் பாதுகாப்பு இயக்கம் மெய்நிகர் நிகழ்ச்சி மூலம் தொடங்கிவைக்கப்பட்டது.
அதில் சிறப்பு விருந்தினராக உள்துறை மற்றும் தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் ஃபைசால்
இப்ராஹிம் கலந்துகொண்டார்.
"சாலைகளில் வாகனம் ஓட்டும்போது விழிப்புடன் இருக்கவும் பணிவுன்புடன் நடந்துகொள்ளவும் ஓட்டுநர்களை ஊக்குவிக்க, பாதுகாப்பான முறையில் வாகனம் ஓட்டும் ஓட்டுநர்களைக் கண்டுபிடிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்
படுகிறது.
"முன்மாதிரியாக விளங்கும் ஓட்டுநர்களைப் போக்குவரத்து போலிசார் தடுத்து நிறுத்துவர். ஆனால் அது அபராதம் விதிப்பதற்காக அல்ல. மாறாக, அவர்களுக்கு கொவிட்-19 பராமரிப்புப் பொருட்கள் வழங்கப்படும்," என்றார் திரு ஃபைசால்.
வழங்கப்படும் கொவிட்-19 பாதுகாப்புப் பொருட்களில் சிறிய பை, கிருமி நாசினி திரவம் தெளிக்கப்பட்ட துடைப்பான்கள், சிறிய கை சுத்திகரிப்பான் போத்தல், பயணங்
களின்போது பயன்படுத்தக்கூடிய கை சுத்திகரிப்பான், மீண்டும் பயன்படுத்தக்கூடிய முகக்கவசம், சாலைப் பாதுகாப்பு சிற்றேடு ஆகியவை அடங்கும்.
சிவப்புப் போக்குவரத்து விளக்கில் நிறுத்தாமல் வாகனத்தைத் தொடர்ந்து ஓட்டுவதாலும் வேக வரம்பை மீறுவதாலும் ஏற்படும் விளைவுகளை வலியுறுத்தும் இரண்டு காணொளிகள் தேசிய தொலைக்காட்சி, சிங்கப்பூர் சாலைப் பாதுகாப்பு மன்றத்தின் ஃபேஸ்புக் பக்கம், யூடியூப் ஆகியவற்றில் ஒளிபரப்பு செய்யப்படும்.
"சாலைகள் பல்வேறு தரப்பினரால் பயன்படுத்தப்படும் பொது இடம் என்பதை நாம் அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். சாலைகளில் வாகனம் ஓட்டும்போது பணிவன்புடன் நடந்து கொள்வதாலும் வாகனங்களைப் பாதுகாப்பான முறையில் ஓட்டுவதாலும் அனைவரும் வீடு திரும்பி தங்கள் அன்புக்குரியவர்களைப் பார்க்கலாம்.
"நமது சாலைகளை மேலும் பாதுகாப்பானதாக்க அனைவரும் பங்காற்ற சிங்கப்பூர் சாலைப் பாதுகாப்பு மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் ஊக்க
மளிக்கும் என நாங்கள் நம்புகிறோம்," என்று மன்றத்தின் தலைவர் பெர்னட் டே தெரிவித்தார்.

