சிங்கப்பூரில் நேற்று நண்பகல் நிலவரப்படி மேலும் 25 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்களில் 19 பேருக்கு சமூக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் ஆறு பேருக்கு ஏற்
கெனவே கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பு இல்லை.
மீதமுள்ள 13 பேர் ஏற்கெனவே கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் தொடர்புடையவர்கள். அவர்களில் 11 பேர் ஏற்கெனவே
தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
பாதிக்கப்பட்ட ஆறு பேர் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள். சிங்கப்பூர் வந்ததும் அவர்களுக்கு இல்லத் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அமைச்சு கூறியது.
சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 62,028ஆக அதிகரித்துள்ளது.
ஹாங் யி குழுமத்தில் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ள எட்டு பேரில் நான்கு சிறுவர்களும் ஒரு பெண்ணும் அடங்குவர். இவர்கள் சாங்கி தொழிற் பூங்காவில் துப்புரவுப் பணி மேற்பார்வையாளராகப் பணிபுரிய ஹாங் யி குழுமத்தால் நியமிக்கபட்ட 30 வயது சிங்கப்பூர் ஆடவரின் குடும்ப உறுப்பினர்
களாவர். அந்த ஆடவருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது இம்மாதம் 23ஆம் தேதியன்று உறுதி செய்யப்பட்டது.
இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த எட்டு மாதப் பெண் குழந்தை, ஒரு வயது சிறுவன், ஏழு மற்றும்
ஒன்பது வயது சிறுமிகள் ஆகியோருக்கு கொவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட ஏழு மற்றும் ஒன்பது வயது சிறுமிகள் பூன் லே கார்டன் தொடக்கப்பள்ளி மாணவிகள். பாதிக்கப்பட்ட இல்லத்தரசிக்கு 32 வயது. ஹாங் யி குழுமத்தில் இதுவரை 17 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட எட்டு மாதப் பெண் குழந்தை குழந்தைப் பராமரிப்பு நிலையத்துக்குச் செல்வதில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நோய்வாய்ப்பட்டுள்ள ஒரு வயது சிறுவன் பூன் லேயில் உள்ள லிட்டில் எக்ஸ்பிளோரஸ் கோவ் குழந்தைப் பராமரிப்பு நிலையத்துக்குச் செல்பவன். ஆகக் கடைசியாக அவன் அந்த நிலையத்துக்குக் கடந்த மாதம் சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
பூன் லே கார்டன் தொடக்கப்பள்ளியில் பயிலும் அந்த இரண்டு சிறுமிகள் ஆக கடைசியாக இம்மாதம் 18ஆம் தேதியன்று பள்ளிக்குச் சென்றிருந்தனர்.
இந்தச் சிறுவர்களும் இல்லத்தரசியும் பாதிக்கப்பட்ட அந்த துப்புரவுப் பணி மேற்பார்வையாளருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக அடையாளம் காணப்பட்டு கடந்த திங்கட்கிழமையன்று தனிமைப்
படுத்தப்பட்டனர்.
இல்லத்தரசிக்குக் கடந்த ஞாயிற்றுக்கிழமை காய்ச்சல் ஏற்பட்டபோதும் அவர் மருத்துவரை நாடவில்லை. மறுநாள் அந்த எட்டு மாத குழந்தைக்கும் காய்ச்சல் ஏற்பட்டது. தொடக்கப்பள்ளியில் பயிலும் அந்த இரு மாணவிகளுக்கும் கடந்த புதன்கிழமையன்று காய்ச்சல் ஏற்பட்டது. ஒரு வயது சிறுவனுக்கு கடந்த வியாழக்கிழமை காய்ச்சல் ஏற்பட்டது. இருப்பினும், அவர்களுக்கு ஏற்பட்ட கொவிட்-19 அறிகுறிகள் பற்றி மருத்துவரிடம் தெரிவிக்கப்படவில்லை.
இந்த ஐவருக்கும் கடந்த வியாழக்கிழமையன்று கொவிட்-19 மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவர்கள் அனைவருக்கும் கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
ஹாங் யி குழுமத்தில் மேலும் ஒரு தொடக்கப்பள்ளி மாணவருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை அந்தக் குழுமத்தில் மூன்று தொடக்கப்பள்ளி மாணவர்கள் உள்ளனர்.
மூன்றாவது மாணவருக்கு 13 வயது. அவர் சிங்ஹுவா தொடக்கப்பள்ளியைச் சேர்ந்தவர். அவர் ஆகக் கடைசியாக இம்மாதம் 18ஆம் தேதியன்று பள்ளிக்குச் சென்றார்.
ஹாங் யி குழுமத்தில் மேலும் இருவர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
அக்குழுமத்தில் துப்புரவுப் பணியாளராகப் பணிபுரியும் ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்த 58 வயது சிங்கப்பூர் இல்லத்தரசியும் Abba பராமரிப்புச் சேவைகளில் பகுதி நேரத் துப்புரவுப் பணியாளராகப் பணிபுரியும் 47 வயது சிங்கப்பூரருக்கும் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, ரோசைத் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் இருமுறை கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எங் சூன் மேசை, நாற்காலி வாடகை நிறுவனத்தில் வேலை செய்யும் 49 வயது அதிகாரிக்கும் ஹுவா சாய் உணவகத்தில் பணிபுரியம் 33 வயது மலேசியருக்கும் ஆங்கர்வேலில் உள்ள வெஸ்ட் கிரில் ஸ்டேஷன் உணவகத்தில் பணிபுரியும் 23 வயது மலேசிய சமையற்காரருக்கும் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

