மெக்டோனல்ட்ஸ், பீட்சா ஹட் உணவகங்களில் கொவிட்-19 பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, கிருமிப் பரவலைத் தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அவை முடுக்கிவிட்டுள்ளன.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மெக்டோனல்ட்ஸ் உணவகங்களில் கொவிட்-19 பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, சிங்கப்பூரில் உள்ள அதன் அனைத்து உணவகங்களையும் மெக்டோனல்ட்ஸ் இரண்டு வாரங்களுக்கு மூடியது.
உணவகங்கள் மீண்டும் திறக்கப்பட்டதும் பல முன்னெச்
சரிக்கை நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
இருப்பினும், இம்மாதம் 20ஆம் தேதியன்று மெக்டோனல்ட்ஸின் பிடோக் ரெசர்வோர் கிளையில் உணவு விநியோக ஓட்டுநருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது. அவருடன் ஒரே இடத்தில் வசித்த
வருக்கு கிருமி பரவியது. அந்த நபர் பாசிர் ரிஸ் இலியாஸ் சமூக மன்றத்தில் உள்ள மெக்டோனல்ட்ஸ் உணவகத்தில் உணவு விநியோக ஓட்டுநராகப் பணிபுரிபவர். இந்தக் குழுமத்தில் மொத்தம் 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் எட்டு பேர் மேல் குறிப்பிடப்பட்ட இரண்டு மெக்டோனல்ட்ஸ் உணவகங்களில் பணிபுரிபவர்கள்.
மீதமுள்ள ஆறு பேர் பீட்சா ஹட் உணவகத்தின் சமையல் பிரிவிலும் உணவு விநியோகப் பிரிவிலும் பணிபுரிபவர்கள்.
மற்ற ஐவர் இந்த பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.
ஏற்கெனவே கடுமையான
கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் இந்த ஆக அண்மைய பாதிப்பு காரணமாக கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தவில்லை என்று மெக்டோனல்ட்ஸ் மற்றும் பீட்சா ஹட் உணவகங்கள் கூறின.
ஊழியர்கள் மற்றும் உணவு விநியோக ஓட்டுநர்கள் குழுக்
களாகப் பிரிக்கப்படுவது, நாளுக்கு இருமுறை உடல்வெப்பநிலை சோதிக்கப்படுவது, அடிக்கடி கை சுத்திகரிப்பானைப் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்வது, ரொக்கமில்லாத மின்னிலக்க கட்டணம் செலுத்தும் முறையைக் கடைப்பிடிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் கிருமிப் பரவலைத் தடுப்பதாக இரு நிறுவனங்களும் கூறின.

