தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பயண முன்பணம் தொடர்பான புகார்கள் கடந்த ஆண்டு அதிகரித்தன

1 mins read
97708c80-fcfd-492f-8c8d-77010a9e9ee1
-

சிங்கப்பூரர்கள் பலரும் சுற்றலா செல்லவும் விமானங்களில் பறக்கவும் ஹோட்டல்களில் தங்கவும் முன்பதிவு செய்து வைப்புத்தொகை அல்லது முன்பணம் செலுத்தி இருந்தார்கள்.

ஆனால் கொவிட்-19 காரண மாக அவற்றில் பலவும் ரத்து செய்யப்பட்டன. அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தாங்கள் செலுத்திய பணத்தைத் திரும்பப் பெற முடியவில்லை என்று கேஸ் எனப்படும் சிங்கப்பூர் பயனீட்டாளர்கள் சங்கத்திடம் அவர்கள் புகார் அளித்துள்ளனர்.

இந்தச் சங்கத்திற்குச் சென்ற ஆண்டு கிடைத்த கொவிட்-19 தொடர்பான புகார்களில் இத்தகைய புகார்களே அதிகமாக இருந்தன.

உடற்பயிற்சிக்கூடங்கள், உடலுறுதி நிலையங்கள், ஹோட்டல்கள், உணவகங்கள், மருத்துவ நிறுவனங்கள், திருமண ஏற்பாடு தொடர்பான நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார்களும் அதிகமிருந்தன.

சென்ற ஆண்டில் பெறப்பட்ட 18,335 புகார்களில் ஏழில் ஒன்று கொவிட்-19 தொடர்பானதாக இருந்ததாக சிங்கப்பூர் பயனீட்டாளர்கள் சங்கம் அறிக்கையில் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்