ஒருவருக்குத் தொடர்பு உண்டு எனில் குடும்பமே தனிமை

ஒருவருக்குத் தொடர்பு உண்டு எனில் குடும்பமே தனிமை

1 mins read
aabf58ed-3b60-4a9d-8091-8994894d9b36
-
Google News Preferred Icon

குடும்ப உறுப்பினர் ஒருவர் கொவிட்-19 நோயாளியுடன் அணுக்கத் தொடர்பில் இருந்தார் என்பது தெரிய வந்தால் அந்த உறுப்பினரின் குடும்பத்தினர் அனைவரையும் தனிமைப்படுத்தும் நட வடிக்கை தொடங்கப்படும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார்.

ஒரு குடும்பத்தில் தொற்று உள்ள ஒருவர் மற்றவர் களுக்கும் கிருமியைப் பரப்பி விடுகிறார் என்பது நமது அனுபவமாக இருக்கிறது என்று திரு லீ கூறினார்.

முதலாமவருக்குத் தொற்று இல்லை என தெரியவந்தால் குடும்பத்தினர் அனைவரும் வழக்கம்போல் வாழலாம் என்று தொலைக்காட்சி உரையில் பிரதமர் கூறினார்.