மே மாதம் அன்றாடம் 55,000 சோதனைகளுடன் 40 பரிசோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றன

மே மாதம் அன்றாடம் 55,000 சோதனைகளுடன் 40 பரிசோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றன

1 mins read
7d50e5f5-7b80-4cc0-9755-766feef4eec1
-

கொவிட்-19 கிரு­மிப் பர­வலை கண்­ட­றி­ய­வும் அது பர­வு­வதை மட்­டுப்­ப­டுத்­த­வும் மே மாதம் 40 பரி­சோ­தனை நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. அவற்­றில் சரா­ச­ரி­யாக 55,000 பிசி­ஆர் பரி­சோ­த­னை­கள் அன்­றா­டம் நடத்­தப்­பட்­ட­தாக சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்­துள்­ளார்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று தொடர்­பான அமைச்­சு­கள்­நிலை பணிக்­கு­ழு­வுக்கு இணைத் தலை­வ­ரு­மான திரு ஓங் நேற்று மெய்­நிகர் செய்­தி­யா­ளர் மாநாட்டி பேசி­னார்.

அதில் பேசிய திரு ஓங், இனி பரி­சோ­த­னை­கள் பரந்த அள­வி­லா­ன­தாக இருக்­கும் என்று தெரி­வித்­தார்.

நேற்­றைய அமைச்­சு­கள்­நிலை குழு­வின் செய்­தி­யா­ளர் மாநாட்­டுக்கு முன் பிர­த­மர் லீ சியன் லூங் ஆற்­றிய தேசிய உரை­யில் தெரி­வித்த 'வேக­மான எளிய முறை­யி­லான பரி­சோ­தனை' முறை குறித்து திரு ஓங் விவ­ரித்­தார்.

"விரி­வான பரி­சோ­த­னை­கள் பெரிய அள­வி­லான நிகழ்ச்­சி­கள், ஒன்­று­கூ­டல்­கள் போன்­ற­வற்­றுக்கு ஏற்­பாடு செய்ய நம்­பிக்கை தரும். எனவே, பரந்த அள­வி­லான, வேக­மான எளிய முறை­யி­லான பரி­சோ­த­னை­கள் இனி புதிய வழக்­க­நி­லை­யாக மாறும் என எதிர்­பார்க்­க­லாம்," என்று திரு ஓங் விளக்­க­ம­ளித்­தார்.